சளி தொல்லையில் இருந்து விடுபட

एनडीटीवी फूड डेस्क  |  Updated: November 23, 2018 18:42 IST

Reddit
Home Remedy (Gharelu Nuskhe) For Cold: How To Use Besan To Relieve Cold And Cough

குளிர்காலத்தில் எல்லோருக்கும் மிகவும் எளிமையாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும். சளி தொல்லையால் மூக்கடைப்பு, தொண்டையில் அரிப்பு மற்றும் குரலில் கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சளி தொந்தரவு இருந்தால் நிச்சயம் உடல் சோர்வு ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். அதேபோல உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆரோக்கிய பானங்களை பருக வேண்டும். இருமல் மற்றும் சளி பிரச்சனைக்கு அலோபதி மருத்துவத்தை அணுகுவதை விட பாட்டி வைத்தியமே சிறந்தது. இந்தியாவின் வட பகுதியில் கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை ஆரோக்கியமான உணவை எப்படி வீட்டிலேயே செய்வது என்பதை பார்ப்போம்.

பால், கடலைமாவு, நெய், வெல்லம் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி அல்வா போன்று இருக்கும். சுட்கா அல்லது பேசன் ஷீரா என்று அழைக்கப்படும் இந்த ரெசிபி சளி மற்றும் இருமல் தொந்தரவை போக்கி உடலை ஆரோக்கியமாக இருக்க செய்யும்.

இதன் நன்மைகள் என்ன?

கடலை மாவில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்து சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு தொல்லையை போக்கிவிடும். கடலைமாவை நெய்யில் வறுத்து, அதில் வெல்லம் சேர்ப்பதால் நுரையீரலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நோய் தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கும்.

h7i01fdo

எப்படி செய்வது?

கொண்டைக்கடலை, சுத்தமான பசு நெய், மஞ்சள், பால், மிளகு மற்றும் வெல்லம் சேர்த்து செய்தால் அல்வா தயாராகிவிடும். அடுப்பில் அடிகணமான பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றவும். அதில் கடலைமாவை சேர்க்கவும். கடலைமாவின் நிறம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அத்துடன் பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறி கொண்டே இருக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து கிளறவும். இறுதியாக அதில் கொஞ்சம் வெல்லத்தை தட்டி போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வேகவிடவும். பின் அடுப்பை நிறுத்திவிட்டு சூடாக இதனை சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால் அதில் சிறிதளவு நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து கொள்ளலாம். இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement