ஏலக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

ஏலக்காயில், மெலடோனின் என்னும் வலிமையான ஊட்டச்சத்து இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்துவிடும்.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 19, 2018 20:21 IST

Reddit
How Chewing On Cardamom (Elachi) Pods May Help Promote Weight Loss

உடல் எடை குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் அல்லது என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இல்லாதபோது அல்லது தாமதமாகும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. வளர்சிதை மாற்றம் என்பது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நிகழும் வேதியம் மாற்றம். வளர்சிதை மாற்றம் தூண்டப்படும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து வளர்சிதை மாற்றம் மாறுபடும். இயற்கையாகவே வளர்சிதை மாற்றம் சீராக இல்லாதபோது, அவற்றை தூண்டும் வகையில், இயற்கை சில மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை வரப்பிரசாதமாக கொடுத்துள்ளது. அவற்றுள் ஒன்று தான் ஏலக்காய். உடல் எடை குறைப்பில் ஏலக்காயின் நன்மைகளை பார்ப்போம்.

உணவில் வாசனையை சேர்க்கும் ஏலக்காயில் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. ஏலக்காய் உணவை எளிதில் ஜீரணமாக செய்யும். உடலில் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்து, உடலில் உள்ள கொழுப்புகளை விரைவில் எரிக்க செய்கிறது. ஒருவருக்கு செரிமான மண்டலத்தில் பிரச்சனை ஏற்படும்போது அவரின் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால், நாம் உண்ணும் உணவின் சத்தும் உடலுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை அதேபோல, கழிவுகளும் முழுமையாக வெளியேற்றப்படுவதில்லை. உடலில் சத்துக்களை தக்க வைக்கவும், நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. தினமும் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். ஏலக்காயில், மெலடோனின் என்னும் வலிமையான ஊட்டச்சத்து இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்துவிடும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

உடல் எடை குறைய

தினமும் இரண்டு அல்லது மூன்று ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் ஜீரணம் எளிதாக இருக்கும். மேலும் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம். ஏலக்காயில் டீ தயாரித்து குடிக்கலாம். அதில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement