கலோரிகளை குறைக்கும் இளநீர்

இளநீர், உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து உங்களை நாள் முழுக்க ஃப்ரஷாக வைத்திருக்கும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: October 06, 2018 23:29 IST

Reddit
Weight Loss: How Drinking Coconut Water Can Help You Shed Kilos? Here's The Answer

உடல் ஆரோக்கியத்திற்கு இளநீர் இன்றியமையாதது. நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை பானம் இளநீர். தினமும் இளநீர் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. அதேசமயம் இளநீர் குடிப்பதனால் உடல் எடை குறையும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை இளநீர் கொடுக்கும் என்பதால் தடகள வீரர்கள் இதனை அடிக்கடி குடிக்கலாம். இளநீரில் பொட்டாஷியம், உடலுக்கு தேவையான தாதுக்கள் போன்றவை இருக்கிறது. இளநீரை எப்போதுவேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், அதற்கான நேரத்தில் இளநீரை உட்கொள்ளும் போது, அதன் பயன் இரட்டிப்பாக இருக்கும். உடலில் உள்ள எலக்ரோலைட்களுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் இளநீரில் மிகுதியாக இருக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து உங்களை நாள் முழுக்க ஃப்ரஷாக வைத்திருக்கும்.

உடல் எடையை குறைய

உடல் பருமனாக இருப்பவர்கள் இளநீரை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இளநீரில் கலோரிகள் குறைவு என்பதால் வயிற்றில் எவ்வித கோளாறும் ஏற்படாது. இதில் பையோ-ஆக்டிவ் என்சைம் (Bio-active enzyme) இருப்பதால் செரிமானம் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்படும். வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும் போது உடலில் கொழுப்பு சேராது. இளநீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு என்றாலும் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும். ஒருநாளில் 3 – 4 முறை இளநீர் குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை கரைத்துவிடலாம்.

coconut water

இளநீரா? பழச்சாறா? எது சிறந்தது?

உடல் எடை குறைக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், பழச்சாறுகளை விடுத்து இளநீரை பருகலாம். பழச்சாற்றை விட இளநீரில் தாதுக்கள் அதிகம். பழச்சாறுகளில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது. இது உடல் எடையை அதிகரிக்க செய்யும். ஆனால், இளநீரில் கலோரிகள் குறைவு, சர்க்கரையும் குறைவு என்பதால் உடல் எடை குறைப்பில் இளநீரே சிறந்தது.

இளநீர் அருந்த சரியான நேரம்

பால் அருந்துவதற்கு இரவை விட காலை நேரம்தான் சரியானது என்பது போல இளநீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. காலை இரவு என எப்போது வேண்டுமானாலும் இளநீர் பருகலாம். இருந்தாலும், காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்துவந்தால் அதன் பலன் இரட்டிப்பாக இருக்கும். இளநீரில் லாரிக் அமிலம் (Lauric acid) இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை கரைத்துவிடும். கர்ப்பக்காலத்தில் இளநீர் அருந்துவதால், உடலில் நீரிழப்பு தடுக்கப்படுவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும். மேலும் காலை நேர சோர்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com