சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் சருமம் பளிச்சிடுமா??

அடிக்கடி உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு சருமத்திற்கும் மிகவும் நல்லது. 

   |  Updated: April 26, 2019 09:43 IST

Reddit
Skin Care: Here's How Eating Sweet Potatoes Can Give You A Fabulous and Glowing Skin

சரும பராமரிப்பு என்று வரும்போது, நீங்கள் நிச்சயம் நம் பாரம்பரிய உணவு பழக்கத்திற்கு மாறியே ஆக வேண்டும்.  ஆனால் தற்போதைய நிலவரம் என்னவென்றால், நம்மில் பலரும் இயற்கை உணவின் மீது படையெடுக்க தொடங்கிவிட்டனர்.  சரும பிரச்னைகள், வெயிலால் கருமை, வயது முதிர்ச்சி காரணமாக சுருக்கம், சோர்வு போன்றவற்றை சரிசெய்ய நினைத்தால் இயற்கை உணவுகளையே சாப்பிட வேண்டும்.  உணவு மட்டுமின்றி வெளிப்ரயோகத்திற்காக ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் பேக் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.  இந்த ஃபேஸ் பேக்களிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகள் நிறைந்திருக்கிறது.  அதிலும் குறிப்பாக கிழங்கு வகையை சார்ந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு அழகு பராமரிப்பில் முக்கியமான ஒன்று. சர்க்கரைவள்ளிக் கிழங்கை கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.  இதனால் முகம் பிரகாசமாகவும், மென்மையாகவும், இளமை தோற்றத்துடனும் இருக்கும்.  இதில் பீட்டா கெரட்டின் அதிகம் என்பதால் சரும பிரச்னைகளை போக்கிவிடும்.  சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் சி மற்றும் ஈ இருப்பதால் சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது.  சருமத்தை இறுக செய்யும் கொலாஜனை அதிகரிக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கிறது.  அந்தோசையனின் இருப்பதால் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை கொடுக்கிறது.  உங்கள் சருமம் அழகாக மாற சர்க்கரைவள்ளிக் கிழங்கை எப்படி சாப்பிடுவது என்று பார்ப்போம்.bqit2mf

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகம் இருக்கிறது.  அதனை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம்.  இதில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  அரை மணி நேரம் இதனை நன்கு வேகவைத்து, மசித்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து சூடாக சாப்பிடலாம். இதனை ஸ்ட்யூ ரெசிபியுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாலட்டாக சாப்பிடலாம்.  உடலுக்கு உடனடியாக ஆற்றல் கொடுக்கக்கூடிய கார்போஹைட்ரேட் இருக்கிறது.  இந்தியாவில் சகர்கண்டி சாட் என்னும் ரெசிபியாக இதனை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.  வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் உறித்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்தால் இந்த ரெசிபி தயார்.  எலுமிச்சையின் புளிப்பு சுவையும் இந்த கிழங்கின் இனிப்பு சுவையும் சேரும்போது அது தனி சுவையாக இருக்கும்.  அடிக்கடி உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு சருமத்திற்கும் மிகவும் நல்லது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement