ஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா... கெட்டதா? -ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு

இதற்கு முன் பல ஆய்வுகள் தினசரி முட்டை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளன

एनडीटीवी फूड डेस्क  |  Updated: March 18, 2019 14:32 IST

Reddit
How Many Eggs-actly? New Shocking Study On Egg Consumption Leaves Twitter Confused

ஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா அல்லது கெட்டதா? இந்தக் குழப்பத்திற்கு காரணம் ஜேஏஎம்ஏ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு இந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு கூடுதலாக முட்டை உட்கொள்வதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இறப்புக்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

17.5 வருட ஆய்வில் 29,615 வயது வந்தோரிடமிருந்து தரவுகளைப் பெற்று இந்த ஆய்வு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் 300மி.கி கொழுப்பினை உட்கொள்வதால் இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்ககூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆய்வு, “கொழுப்பு மனித உணவுகளில் ஒரு பொதுவான ஊட்டச்சத்து. முட்டை கொழுப்புச் சத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. உணவில் கொழுப்பு அல்லது முட்டை சாப்பிடுவது இதய நோயுடன் தொடர்புடையதாக உள்ளது” எனத் சர்ச்சைக்குரிய தகவலைத் தெரிவித்துள்ளது. 

இந்த ஆய்வுக்கான தரவுகள் மார்ச் 25, 1985  மற்றும் ஆகஸ்ட் 31, 2016 வரை சேகரிக்கப்பட்டவையாகும். இந்த தகவல்கள் சுய உணவு பழக்க அடிப்படையில் சேகரிக்கப்பட்டது. இதன் படி 5,400 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. (2,088 இறப்புக்கான அபாயம், மற்றும் இதய நோய்கள்  1,302 இறப்பிற்கான அபாயஙகளும் ஏற்பட்டுள்ளது) 

இந்த ஆய்வு முட்டையை விரும்பி சாப்பிடுவோர்  மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஒருநாளைக்கு அல்லது ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன் பல ஆய்வுகள் தினசரி முட்டை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு குறித்து ட்விட்டரில் எழுந்த சில பதில்களைப் பாருங்கள். 

இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவர் ராய்ட்டர்ஸ்க்கு பதிலளித்த போது முட்டைகளை முற்றிலுமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை எனத் தெரிவித்தார். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இறப்பு மற்றும் இதய நோய்களுக்கு ஆபத்து அதிகமெனத் தெரிவித்துள்ளது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com