நம் உடலுக்கு எவ்வளவு புரதம் தேவைப்படுகிறது??

வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் சியா விதை, கீரைகள், எள், ஸ்பைருலினா போன்றவற்றை சாப்பிடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 14, 2019 11:29 IST

Reddit
Healthy Diet: How Much Protein Is Enough? Celeb Nutritionist Rashi Chowdhary Reveals All About Protein
Highlights
  • உடல் ஃபிட்டாக இருக்க அதிகபடியான புரதத்தை சேர்த்து கொள்ளலாம்.
  • வீகன் டயட்டில் புரதம் நிறைந்திருக்கிறது.
  • சோயா மற்றும் சீஸ் போன்றவற்றில் புரதம் இருக்கிறது.

உடலுக்கு தேவையான மூன்று முக்கிய சத்துக்களுள் புரதமும் ஒன்று.  கொழுப்பு சத்தும், கார்போஹைட்ரேட்டும் நாம் சாப்பிடக்கூடிய பலவகையான உணவுகளில் இருந்து கிடைத்து விடுகின்றன.  ஆனால் புரதத்தை நாம் தேர்ந்தெடுத்து தான் சாப்பிட வேண்டியுள்ளது.  புரதத்தை சேர்த்து கொள்வதால் மட்டுமே உடல் ஆரோக்கியமாகவும், உடல் பருமனாகாமலும் இருக்கிறது.  நம் உடலுக்கு எவ்வளவு புரதம் தேவைப்படும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

 

A post shared by Rashi Chowdhary (@rashichowdhary) on

 

நம் உடலில் எடை, வடிவம் மற்றும் அளவு பொருத்து நம் புரத தேவை மாறுபடும்.  உடல் எடை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் ஒருவருக்கு சராசரியாக புரதத்திலிருந்து 30 சதவிகித கலோரிகள் உடலுக்கு போதுமானது.  

ஆரோக்கியமான புரதம் உணவுகள் குடல் மற்றும் சருமத்தில் எவ்வித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.  பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நிச்சயம் புரதம் இருக்காது.  சீஸ் மற்றும் சோயா சங்க்ஸ் ஆகியவற்றில் புரதம் அதிகமாக உள்ளதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  

பருப்புகள் மற்றும் தானியங்களில் புரதம் நிறைந்துள்ளது.  வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் சியா விதை, கீரைகள், எள், ஸ்பைருலினா போன்றவற்றை சாப்பிடலாம்.  இவை குடல் இயக்கத்தை சீராக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.   

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement