மலச்சிக்கலில் இருந்து விடுபட இதை குடிக்கலாம்!!!

ஆளிவிதையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கொலஸ்ட்ராலை தவிர்த்து இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 03, 2019 11:08 IST

Reddit
Here's How This Ayurvedic Tea May Help Relieve Constipation
Highlights
  • எப்போதாவது ஏற்படும் மலச்சிக்கலை எளிதில் சரிசெய்யலாம்.
  • நிறைய தண்ணீர் குடிப்பதால் குடல் இயக்கங்கள் சீராக இருக்கும்.
  • ஆளிவிதையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.செரிமான பிரச்னையின் விளைவுதான் மலச்சிக்கல்.  மலச்சிக்கல் என்பது எல்லா வயதினருக்கும் வரக்கூடிய ஒன்று.  கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 22 சதவிகித இந்தியர்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  நம் உணவுகளில் கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிகம் இருப்பதால் செரிமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.  செரிமானம் தாமதமாவதால் குடல் இயக்கங்களும் பாதிக்கப்படுகிறது.  மலச்சிக்கல் ஏற்பட மேலும் சில காரணங்கள் உண்டு.  உடலில் நீரிழப்பு, மருந்துகள், மன அழுத்தம், உடல் உபாதைகள் என மற்ற காரணிகளாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.  அவ்வப்போது மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம்தான்.  ஆனால் நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னைக்குறியது. மலச்சிக்கலை உடனடியாக சரிசெய்யாவிட்டால் ஹீமராய்ட்ஸ் மற்றும் ரெக்டல் ப்ரோலேப்ஸ் ஏற்படும்.  அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலை நிறைய தண்ணீர் குடிப்பதாலும், நீராகாரங்கள் நிறைய எடுத்து கொள்வதால் குடல் இழகி மலம் கழிப்பது சுலபமாகிறது.  ஆயுர்வேத மருத்துவத்தின்படி, நிறைய பழங்கள், மூலிகைகள் மற்றும் மற்ற உணவுகள் மலம் இழக்கியாக பயன்படுத்தப்படுகிறது.  உதாரணமாக வெதுவெதுப்பான பாலில் நெய் சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.  நார்ச்சத்து நிறைந்த உணவுகளான அத்திப்பழம், கொய்யா மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதாலும் மலச்சிக்கல் சரியாகும்.   மலச்சிக்கலை எளிமையாக சரிசெய்ய ஆயுர்வேத குறிப்பு இங்கே.....

t0qm8sbஇரவு தூங்க செல்லும் முன் ஒரு மேஜைக்கரண்டி ஆளிவிதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.  ஆறியபின் ஆளிவிதையுடன் அதனை அப்படியே குடித்துவிடவும்.  ஆளிவிதை செரிமான பிரச்னைகளை போக்க வல்லது.  இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலத்தை சிக்கலின்றி வெளியேற்றிவிடும்.  ஆளிவிதையில் ம்யூசிலேஜ் என்னும் பொருள் இருப்பதால் தண்ணீருடன் சேரும்போது ஜெல் போன்று மாறும்.  இது குடல் இயக்கங்களை மென்மையாக்கி மலம் கழிக்கும்போது வலியை உண்டாக்காமல் இருக்கும். 

Listen to the latest songs, only on JioSaavn.comஆளிவிதையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கொலஸ்ட்ராலை தவிர்த்து இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  புரதம் நிறைந்திருப்பதால் உடல் எடை குறைய இதனை சாப்பிடலாம். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement