ரெஸ்டாரன்டில் செய்யும் பிரஞ்சு ஃப்ரைஸை வீட்டில் தயாரிப்பதற்கான எளிதான முறைகள் இதோ!

   |  Updated: July 12, 2018 22:25 IST

Reddit
How To Fry French Fries: Easy Steps To Make Restaurant-Style French Fries At Home
பிரஞ்சு ஃப்ரைஸை சரியான முறையில்  ஃப்ரை செய்வது எப்படி என்பது தெரிய வேண்டுமா? பிரஞ்சு ஃப்ரைஸை சுவையாக ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரன்ட்களில் கொடுப்பதுப் போல் சமைப்பது அவ்வளவு சுலபமானதில்லை. நீங்கள் வீட்டில் தங்க மஞ்சள் நிறத்திலான  பிரஞ்சு ஃப்ரைஸை மீண்டும் தயாரிக்க விரும்பினால் அதற்கான சிறந்த வழி ஃப்ரோஸன் பிரஞ்சு ஃப்ரைஸ் பாக்கெட்டை வாங்கி அதை பான் அல்லது ஃப்ரையரில் வறுத்தெடுக்கலாம். எப்படியிருந்தாலும் ரெஸ்டாரன்டில் தயாரிக்கும் பிரஞ்சு ஃப்ரைஸை விட வீட்டில் தயாரிக்கும் பிரஞ்சு ஃப்ரைஸ் ஆரோக்கியமானது. ஆம் வீட்டில் தயாரிக்கும் பிரஞ்சு ஃப்ரைஸ்க்கு திட்டங்களும் கவனமான வெப்பநிலைக் கட்டுபாடுகளும் தேவை.எனவே உங்கள் பிரஞ்ச்  ஃப்ரைஸ் சரியான கோல்டன் மஞ்சள் நிறத்தில் மற்றும் மெலிசான வடிவத்தை கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
french fries

பிரஞ்சு ஃப்ரைஸ் எப்படி ஃப்ரை செய்வது என்பதை நாங்கள் சொல்வதற்கு முன், எப்படி மற்றும் எதற்காக பிரஞ்சு ஃப்ரைஸை நீரில் அலச வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வோம்.நீங்கள்  பிரஞ்சு ஃப்ரைஸை வீட்டில் தயாரிக்கும் போது அது கோல்டன் மஞ்சள் நிறம் , மொறுமொறுப்பு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டதாக இருப்பதற்கு பிரஞ்சு ஃப்ரைஸை ஃப்ரை செய்வதற்கு முன்னர் நீரில் அலசுவது முக்கியமானது. உருளைக்கிழங்குகள் முழுவதும் ஸ்டார்ச் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே நாம் உருளைக்கிழங்கு நீளம் வாரியாக வெட்டும்போது, ​​உருளைக்கிழங்கில் உள்ள இயற்கை சர்க்கரை கீற்றுகளின் மேற்பரப்பில் வெளியிடுகிறது. அலசாமல் அவற்றை வறுத்தெடுத்தால், சர்க்கரை வெளியில் உள்ள  சூடான எண்ணெயில் கேரமலைஸ் செய்து உருளைக்கிழங்கின் உட்புற பகுதிக்கு முன்பாக எரிக்கப்படும், இது பழுப்பு மற்றும் அருவருப்பான பிரஞ்சு ஃப்ரைஸை உருவாக்குகிறது.ஆகையால் ஊருளைக்கிழங்கை வறுப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக தண்ணீரில் உறவைப்பது முக்கியமானது. இது சக்கரை மற்றும் ஸ்ட்ராச்சை அதில் இருந்து அகற்றுகிறது.உருளைக்கிழங்கை வறுப்பதற்கு முன்பு அதை தண்ணிர் இல்லாமல் உலர்ந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
potatoes 620

கடாயை பயன்படுத்தி பிரஞ்சு ஃப்ரைஸ் ஃப்ரைஸ் செய்வது எப்படி? 
Newsbeep
தேவையான பொருட்கள்:
 • வறுப்பதற்காக 1.5 லிட்டர் தேங்காய் அல்லது வெஜிடபுள் எண்ணெய்
 • 4 பெரிய உருளைக்கிழங்குகள்
 • உப்பு(சுவைக்கேற்ப)

french fries

செய்முறை:
 • நீங்கள் அலுசுகின்ற வேலையை முடித்துவிட்டீர்கள் என்றால், இது வறுப்பதற்கான நேரம்.
 • நடுத்தர அளவிலான கடாயில் உங்களின் விருப்பமான சமையல் எண்ணெயை ஊற்றுங்கள் , எண்ணெயில் சிறிய குமிழ்கள் வரும் வரை  சூடு படுத்துங்கள்.
 • இப்போது வெட்டி வைத்த உருளைக்கிழங்கை அதில் சேருங்கள். அதிகமான உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்.
 • லெசான கோல்டன் நிறத்தில் வரும் வரை அல்லது 5-6 நிமிடங்கள் வறுக்கவும்,
 • அதை வெளியில் எடுத்து அரையின் வெப்பநிலைக்கு வரும் வரை ஆரவிடவும்.
 • மீண்டும் அந்த ஃப்ரைஸை கடாயில் போட்டு 2-3 நிமிடங்கள் அல்லது கிரிஸ்பி டார்க்கான கோல்டன் நிறத்தை அடையும் வரை வறுக்கவும்.
 • ஃப்ரைஸில் இருக்கும் அதிக எண்ணெயை உறிய அதை சரியான துணியில் வையுங்கள்.
 • ஃப்ரைஸ் மீது உப்பை தூவுங்கள், பிரஞ்சு ஃப்ரைஸ் வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும்.
 •  பிரஞ்சு ஃப்ரைஸை ஏர் பிரையர் பயன்படுத்தி ஃப்ரை செய்வது எப்படி

தேவையானப் பொருட்கள்
 • 4 பெரிய உருளைக்கிழங்குகள்
 • 2 டேபுள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய்
 • 1 டீஸ்பூன் உப்பு 
 • 1 டீஸ்பூன் பப்ரிக்கா
 • 1 டீஸ்பூன் பூண்டு பொடி
 • ½ டீஸ்பூன் மிளகுத் தூள்
 • ½ டீஸ்பூன் வெங்காயப் பொடி.

செய்முறை

நீங்கள் அலுசுகின்ற வேலையை முடித்துவிட்டீர்கள் என்றால், இது ஏர் ஃபிரையரைப் பயன்படுத்தி வறுப்பதற்கான நேரம்.

ஒரு பெரிய பவுளில் வெட்டிய உருளைக்கிழங்குகளைப் போட்டு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு சிஸனிங் செய்யுங்கள். இதன் மூலம் அனைத்தும் நன்றாக ஒன்று சேரும்.

15- 20 நிமிடங்கள் 356 பாரன்ஹீட் வெப்பத்தில் ஏர் ஃபிரையரில் சமையுங்கள். ஃப்ரைஸை பாஸ்கேட்டில் வறுங்கள், அதனால் அனைத்து பாகங்களும் நன்றாகவும் மென்மையகவும் வெந்திருக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

ஏர் ஃபிரையுட் பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதற்காக தயாராக உள்ளது.

நீங்கள் வீட்டில் செய்ய முடிகின்ற இரண்டு பிரஞ்சு ஃப்ரை ரெஸிப்பிகள் இங்கு உள்ளது.எனவே சில உருளைக்கிழங்குகளை எடுத்து இந்த எளிய சமையல் முறையை முயற்சி செய்யுங்கள். 

Comments
 
a1fvw6sjoj

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement