பூசணி விதையை தினசரி உணவில் எப்படி சேர்ப்பது?

 பூசணி விதையில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் அஃப்ரோடிசியாக் தன்மை உள்ளது.  மேலும் இதில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன. 

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 25, 2019 12:30 IST

Reddit
Healthy Food: How To Include Pumpkin Seeds In Your Daily Diet
Highlights
  • பூசணி விதையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு.
  • பூசணி விதையை தினசரி சாப்பிடும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
  • புரதம், வைட்டமின், மினரல் ஆகிய சத்துக்கள் நிறைந்தது பூசணி விதை.

இனிப்புகள் மற்றும் பிற சமையல்களில் பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவற்றை சேர்ப்பது வழக்கமாகிவிட்டது.  இந்த விதைகள் உணவில் ருசியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது.  பூசணி விதையில் புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன.  இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நாட்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது பூசணி விதை.  தொடர்ச்சியாக பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  தினசரி பூசணி விதையை எப்படி உணவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.  

Newsbeepபூசணி சாஸ்:

பூசணி விதைகளை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து அதனை சாஸாக பயன்படுத்தலாம். பெஸ்டோ சாஸ் மற்றும் டார்டர் சாஸுடன் ருசியாக இருக்கும்.  இந்த சாஸை தோசை, இட்லி மற்றும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்தி கொள்ளலாம். 

qfebvej8சாலட்:

பூசணி விதைகளை லேசாக வறுத்து அதனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.  இப்படி சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் இன்னும் அதிகரிக்கும். ஸ்மூத்தீஸ்:

நீங்கள் ஸ்மூத்தீ தயாரிக்கும்போது, அத்துடன் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை சேர்த்து அரைத்து குடுக்கலாம் அல்லது மேலே தூவி குடிக்கலாம். 

 

a4gl7ndo

 

டெசர்ட்ஸ்:

பாதாம் மற்றும் முந்திரியை தவிர்த்து, வறுத்த பூசணி விதையை உங்கள் டெசர்ட்ஸுடன் சாப்பிடலாம்.  உங்கள் டெசர்ட்டிற்கு மேலும் கொஞ்சம் ருசியை சேர்க்கும்.  ஸ்நாக்ஸ்:

பூசணி விதையையே ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.  அதில் சிறிதளவு வெங்காயம், தக்காளி, மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.  நீங்கள் விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம். 

152216i8

Listen to the latest songs, only on JioSaavn.com

 பூசணி விதையில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் அஃப்ரோடிசியாக் தன்மை உள்ளது.  மேலும் இதில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன.  இது உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement