உடல் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த வேண்டுமா? இந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

உடல் ஹீமோகுளோபின் அளவு இயல்பு நிலையில் வைத்திருப்பதனால், உடல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: August 04, 2018 15:36 IST

Reddit
How To Increase Hemoglobin: Natural Ways To Up Your Platelet Count

உடல் இரத்த அணுக்களில் இருக்கும் இரும்புச்சத்து நிறைந்த ஹீமோகுளோபின், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது. நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல ஹீமோகுளோபின் பயன்படுகிறது. எனவே, சரியான அளவில் உடல் ஹீமோகுளோபின் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பொதுவாக, ஆண்களுக்கு 14- 18 கி/ டெ.லி, பெண்களுக்கு 12- 16 கி/டெ.லி ஹீமோகுளோபின் இருப்பது இயல்பு நிலையில் சேரும்.

உடலில், ஹீமோகுளோபின் அளவு குறையும் போது, தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஹீமோகுளோபின் அளவு இயல்பு நிலையில் வைத்திருப்பதனால், உடல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்

1. ஃபோலிக் ஆசிட்

பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் வகையைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில், ஃபோலிக் ஆசிட் குறைபாடு காரணமாக இரத்த அணுக்கள் குறைகின்றன. வாழைப்பழம், தக்காளி, முளைப்பயிறு, பீட்ரூட் போன்றவற்றில் ஃபோலிக் ஆசிட் இடம் பெற்றிருக்கும்.

2. குப்பைமேனி தேநீர்

வைட்டமின் பி, சி சத்து அதிகம் உள்ள குப்பைமேனி இலையின் தேநீர் பருக வேண்டும். சுடு தண்ணீரில், இரண்டு ஸ்பூன் அளவிலான குப்பைமேனி இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும். தினம், இரண்டு முறை குடித்து வந்தால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

3. வைட்டமின் சி

எலுமிச்சை, திராட்சை, பப்பாளி, ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு,தக்காளி போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்

உடலில், இரும்புச் சத்து குறைபாடினால், ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும். கீரை வகைகள், பூசணி, பீட்ரூட், சிக்கன் கல்லீரல், பேர்ச்சம்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

5. ஆப்பிள்

உடலுக்கு தேவையன ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆப்பிள், உடல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. தினம், ஒரு ஆப்பிள் அல்லது ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.

6. தவிர்க்க வேண்டியவை

உடலில், குறைந்த ஹீமோகுளோபின் அளவு இருந்தால், காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement