பால் பாக்கெட் மூலம் கொரோனா தொற்று ஏற்படும் என்கிற பயமா? சுத்தம் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்

ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றினாலே பால்பாக்கெட் சுத்தமாகி விடும், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

   |  Updated: July 21, 2020 11:56 IST

Reddit
How To Keep Packaged Milk Clean Amid COVID-19? FSSAI Shares Some Tips

பால் பாக்கெட்டை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து FSSAI இன் வழிகாட்டுதல்

Highlights
  • சோப்பு, கிருமி நாசினி பயன்படுத்தி பால்பாக்கெட்டை சுத்தம் செய்ய வேண்டாம்
  • இந்தியாவைப் பொறுத்தவரையில் பால் என்பது அத்தியாவசிய உணவுப் பொருள்
  • FSSAI சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

இந்தியாவைப் பொறுத்தவரையில் பால் என்பது அத்தியாவசிய உணவுப் பொருளாகும். ஒவ்வொரு வீட்டிலும் தினமும் காலை, மாலை இருவேளையிலும் டீ, காபி, பால் குடிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர், ஏதாவது ஒரு பொருளைத் தொட்டால் அந்தப் பொருளின் மூலமாக மற்றவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, கடையில் இருந்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் நாம் சுத்தப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. அந்த வகையில் பால் பாக்கெட்டை எப்படி சுத்தப்படுத்த வேண்டும்? பால் பாக்கெட்டைக் கிருமி நாசினி, சோப்பு போட்டுக் கழுவலாமா வேண்டாமா என்பது குறித்து இங்குப் பார்க்கலாம்.

Newsbeep

இதுதொடர்பாக மத்திய அரசின் உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அதன்படி, சோப்பு, கிருமி நாசினி போன்றவற்றைப் பயன்படுத்தி பால்பாக்கெட்டை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

FSSAI வழங்கிய பாதுகாப்பு குறிப்புகள்:

1.  பால் பாக்கெட்டை வாங்கும் போது பால்காரர் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து உள்ளாரா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அணியாமல் இருந்தால் முகக்கவசம் அணியம்படி அறிவுறுத்தவும். அதன்பிறகு, சற்றுத் தள்ளி நின்று பால் பாக்கெட்டுகளை வாங்கவும். முடிந்தால் பால் பாக்கெட்டை வீட்டு வாசலில் வைத்து விட்டுப் போகும்படி கேட்டுக்கொள்ளலாம்.

2. இவ்வாறு பால் பாக்கெட்டை வாங்கிய பிறகு, அதை நன்கு தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். இதற்காக தனியாக சோப்பு அல்லது கிருமிநாசினி பயன்படுத்தத் தேவையில்லை. இது நமக்கே ஆபத்தாகிவிடும். எனவே, பால் பாக்கெட்டை வெறும் நீரில் நன்கு கழுவினால் போதுமானது.

3. அதன்பிறகு பால் பாக்கெட் மேல் இருக்கக் கூடிய நீர்த்துளிகள் உலரும் வரையில் சற்றுத் தள்ளி வைத்திருக்க வேண்டும். நன்கு சுத்தமான துணியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

4. பின்பு, உங்கள் கைகளை நன்கு சோப்பு அல்லது ஹேண்டு சானிடைசர் உபயோகப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் சுத்தம் செய்த பால் பாக்கெட்டை எடுக்க வேண்டும்.

5. பால் பாக்கெட் நன்கு உலர்ந்துள்ளதா என்பதை உறுதிசெய்த பிறகு, அதனைப் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இல்லையெனில் மேலே உள்ள நீர்த்துளிகள் பாத்திரத்தில் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, பால் பாக்கெட் நன்கு உலர்ந்த பிறகு பாத்திரத்தில் பால் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும்.

(Also Read: )

Listen to the latest songs, only on JioSaavn.com

4lg86jroIt is essential to take care of milk and milk products in Covid-19 times. 

மேற்கண்ட  ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றினாலே பால்பாக்கெட் சுத்தமாகி விடும், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். FSSAI ஆணையத்தின்படி, பால் மற்றும் பால் பொருட்களை அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இது நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement