ராஜஸ்தானில் வெண்டைக்காய் பொரியலை இப்படிதான் செய்வார்கள்!

பிந்தி மசாலா, குர்குரி பிண்டி, பர்வான் பிந்தி என எல்லோராலும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற வெண்டைக்காய் வருவல் அல்லது பொரியல் வட இந்திய வீடுகளில் அதிகம் சமைக்கப்படக்கூடிய துணை உணவுகளில் ஒன்றாகும். 

  |  Updated: July 08, 2020 12:31 IST

Reddit
How To Make Besan Bhindi (Authentic Rajasthani Specialty) At Home

பெசன் பிந்தி ஒரு விரைவான மற்றும் எளிதான உணவாகும்.

Highlights
  • Bhindi is one of the most common vegetables in Indian cuisine.
  • Besan bhindi is a Rajasthani speciality with a slight variation.
  • Here is an easy recipe to help you make it at home.

பிந்தி மசாலா, குர்குரி பிண்டி, பர்வான் பிந்தி என எல்லோராலும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற வெண்டைக்காய் வருவல் அல்லது பொரியல் வட இந்திய வீடுகளில் அதிகம் சமைக்கப்படக்கூடிய துணை உணவுகளில் ஒன்றாகும்.  வட இந்திய மாநிலங்களில் இது சமைக்கப்பட்டாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் சற்று வித்தியாசமாக சமைக்கப்படுகிறது. பெசானி பிந்தி என்று அழைக்கப்படுகிற இந்த உணவானது பிரபலமான ராஜஸ்தானி துணை உணவாகும், இது ரோட்டி-சப்ஸி காம்போவுடன் அல்லது பருப்பு-அரிசி காம்போவுடன் துணை உணவாக வழங்கப்படுகிறது. மிருதுவான வெண்டைக்காய் இந்த வகை உணவு தயாரிக்க சிறந்தது.

(Also Read: Bhindi 65 - This New Style Of Making Bhindi Is Sure To Take You By Surprise!)

Newsbeep
pv8lg2r

இந்திய வீடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய்

எளிதான பெசானி பிந்தி செய்முறை:

தேவையான பொருட்கள் -

250 கிராம் வெண்டைக்காய்

2 டீஸ்பூன் கடலை மாவு

அரை தேக்கரண்டி சீரகம்

அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி மாங்காய் பொடி

1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

அரை எலுமிச்சை சாறு

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு சிவப்பு மிளகாய் தூள்

ஒரு சிட்டிகை பெருங்காயம்

Listen to the latest songs, only on JioSaavn.com

செய்முறை 

  • வெண்டைக்காயை முழுவதுமாக கழுவி, முழுமையாக வெட்டாமல் பிளந்த வாய் மாதிரி வெட்டவும்.
  • ஒரு கடாயில், எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி, வெட்டி வைத்திருந்த வெண்டைக்காயை வறுத்து பின்னர் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • அதே கடாயில், தேவைப்பட்டால் அதிக எண்ணெய் சேர்க்கவும். பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து சீரகம் பொறிக்க தொடங்கியவுடன் கடலை மாவு பழுப்பு நிறமாகி அதன் நறுமணத்தை வெளியிடும் வரை வறுக்கவும்.
  • உப்பு, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • ஏற்கெனவே வதக்கி வைத்திருந்த வெண்டைக்காயை எடுத்து மசாலாவுடன் நன்கு சேரும் வரை கலக்கவும்.
  • பின்னர் எலுமிச்சை சாறை பிழிந்துக்கொள்ளவும். தேவையெனில் இறுதியாக ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக வேக வைத்துபின் இதோ உங்களுக்கு பர்வான் பிந்தி என்கிற வட இந்திய உணவு தயார்.

 இப்போது நீங்கள் இதை எவ்வாறு செய்தீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement