காபூசினோ- ஒரு காபி மெஷின் இல்லாமல் எப்படி தயாரிப்பது

Unik Dhandhi  |  Updated: July 31, 2018 23:30 IST

Reddit
How to Make Cappuccino Without a Coffee Machine
coffee

செய்முறை 1

தேவையான பொருட்கள்

• இன்ஸ்டன்ட் காபி
• பால்
• சீல் செய்யப்பட்ட கண்டைனர்
• காபி கெட்டில்
• சர்க்கரை
• 1 கப் தண்ணீர்

வழிமுறைகள்:

1. ஒரு கெட்டிலில் ஒரு கப் தண்ணீர் கொதிக்க வைக்கவும். 1 கப்பில் 1 அல்ல 2 தேக்கரண்டி காபித்தூளை எடுத்துக்கொள்ளவும். அதில் கொதிக்கவைத்த தண்ணீரை சேர்க்கவும். சர்க்கரை தேவையான அளவு சேர்க்கவும்.

2. பால் தேவையான அளவு தனியே கொதிக்கவைக்கவும்.

3. சூடான பால்லை ஒரு மூடியுடன் உள்ள ஜாடியில் மாற்றவும். அதை நுரை வரும் வரை நன்கு குலுக்கவும்

4. காபி தூள் மற்றும் கொதித்த தண்ணீர் கப்பில் இந்த பாலை சேர்க்கவும்.
இதோ கேப்சினோ ரெடி !

coffee beans

செய்முறை 2

தேவையான பொருட்கள்

• இன்ஸ்டன்ட் காபி
• பால்
• சர்க்கரை
• கெட்டில்
• 1 கப் தண்ணீர்

வழிமுறைகள்:

1. பால் காய்ச்சவும், ஒரு காபி குவளையில் சர்க்கரை 1 தேக்கரண்டி, 1.5 தேக்கரண்டி காப்பி தூள் சேர்த்து. அரை தேக்கரண்டி தண்ணீரைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் ஸ்பூன் கொண்டு நன்கு கலக்கவும்.
2. காய்சிய பாலை இதனுடன் சேர்த்தவும்
காபி ரெடி !

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement