உடல் எடையைக் குறைக்க உதவும் கோதுமை ரவா இட்லி!

உடல் எடையைக் குறைக்க உதவும் கோதுமை ரவா இட்லி செய்முயை இங்குக் காணலாம்.

   |  Updated: August 11, 2020 17:37 IST

Reddit
High Protein Diet: How To Make Daliya Idli For Weight-Loss-Friendly Breakfast 

காலை உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும்

ஒரு நாளின் பொழுது எப்படி அமைகிறது என்பது காலையில் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்து தான் அமைகிறது. காலை உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய பொழுதில் சுறுசுறுப்பாகவும், திடகார்த்தமாகவும் இருக்க முடியும்.

காலை உணவை தவிர்ப்பது அவ்வளவு நல்லதன்று. இது பல விதமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். சிலர் அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவைக் கூட சாப்பிடாமல், போகும் வழியில் டீ குடித்து விட்டுச் செல்வார்கள். இது உடலுக்கு மிகமிக கேடு விளைவுக்கும். அல்சர் போன்ற நோய்களும் ஏற்படக் கூடும். 

 இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் டயட்டில் இருப்பார்கள். ஆனால், கொழுப்பு மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களும் கூட காலை உணவை தவிர்க்கக் கூடாது. அப்படி என்றால் என்ன செய்யலாம்? உடல் எடை குறைப்புக்கும், டயட்டை மெயின்டேன் செய்வதற்கும் ஏற்ற டிபன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். 

அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் கோதுமை ரவா இட்லி செய்முயை இங்குக் காணலாம்.

mi6grq4o

கோதுமமை ரவா இட்லி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 

  • 1 கப் கோதுமை ரவை
  • 2 கப் புளித்த தயிர்
  • உப்பு சிறிதளவு
  • கேரட் தூவல்

செய்முறை: 

Listen to the latest songs, only on JioSaavn.com

  1. முதலில் கோதுமை ரவையை அதன் நிறம் மாறும் வரையில் வறுக்க வேண்டும். 
  2. வறுத்தப் பின்பு, அதை ஆற வைத்து, அத்துடன் தயிர், உப்பு சேர்த்து மென்மையாகும் வரை மசிக்க வேண்டும். 
  3. சுமார் 30-40 நிமிடங்கள் வரையில் ஊற வைக்கவும்
  4. நன்றாக ஊறிய பிறகு அத்துடன் நறுக்கிய கேரட் தூவல்களை சேர்க்க வேண்டும். 
  5. இப்போது இட்லி குக்கரில் மசித்த மாவை இட வேண்டும்
  6. 10 நிமிடம் ஆவியாதலில் வைத்து எடுக்க வேண்டும். 

அவ்வளவு தான் எளிதான கோதுமை ரவா இட்லி ரெடி!


 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement