சுவையான டெசர்ட் ரெசிபிகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்!!!

பேரிச்சையில் 80 சதவிகிதம் இனிப்பு சுவை மிகுந்திருக்கிறது.  இதில் புரதம், நார்ச்சத்து, சிங்க், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 17, 2019 13:27 IST

Reddit
Healthy Cooking Tips: How To Make Date Paste To Replace Sugar In Desserts
Highlights
  • இயற்கையாகவே பேரிச்சையில் இனிப்பு சுவை அதிகம்.
  • பேரிச்சையில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
  • தேன் மற்றும் மேப்பிள் சிரப்பிற்கு பதிலாக பேரிச்சை சிரப் பயன்படுத்தலாம்.

கேக், மஃபின், குக்கீஸ் போன்றவற்றில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.  பொதுவாகவே எப்படிப்பட்ட இனிப்பு பலகாரங்களை தயாரிப்பதற்கும் சர்க்கரையே பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது.  இது தவிர சாஸ், டிப், சாண்ட் விச் ஸ்ப்ரெட், குளிர்பானங்கள் போன்றவற்றிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.  இந்த உணவுகளால் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் அதிகரிக்கிறது.  மேலும் மிக விரைவில் சருமத்தில் இளமை தோற்றத்தை போக்கி முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.  இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரையை தவிர்த்து இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுதியான பேரிச்சையை எப்படி சேர்த்து கொள்வதென்று பார்ப்போம். பேரிச்சையின் நன்மைகள்:

பேரிச்சையில் 80 சதவிகிதம் இனிப்பு சுவை மிகுந்திருக்கிறது.  இதில் புரதம், நார்ச்சத்து, சிங்க், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.  100 கிராம் பேரிச்சையில் 282 கிலோ கலோரிகள் உள்ளது.  பேரிச்சையை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.  பேரிச்சை சிரப் கொண்டு கேக், கப் பேக், க்ரானோலா பார், புட்டிங், அல்வா, லட்டு மற்றும் பர்ஃபி போன்ற இனிப்புகளை தயாரிக்கலாம். t2n8j9f 

 

பேரிச்சை பேஸ்ட் தயாரிக்க:

வெதுவெதுப்பான நீரில் கொட்டை நீக்கிய பேரிச்சையை போட்டு சில மணி நேரங்கள் ஊற வைக்கவும்.  ஊறவைத்த பேரிச்சையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். 

 gkp851r 

அத்துடன் உப்பு அல்லது பட்டைத்தூள் சேர்த்து கொள்ளவும்.  இந்த பேஸ்டை தேன் அல்லது மேப்பிள் சிரப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். 

பேரிச்சை சிரப் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரிச்சையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.  இதே நீரை மிதமான சூட்டில் சில மணி நேரங்கள் கொதிக்க வைப்பதால் இனிப்பான பேரிச்சை சிரப் தயாராகிறது. 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com