Translated by: Kamala Thavanidhi | Updated: August 07, 2019 18:56 IST
சாப்பிட்ட பின் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குடிப்பதை நம்மில் சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். பொதுவாகவே சாஃப்ட் ட்ரிங்கில் செயற்கை நிறம் மற்றும் ஃப்ளேவர்ஸ் சேர்க்கப்படுகிறது. கோடைக்காலத்தில் இந்த சாஃப்ட் ட்ரிங்கிற்கு மவுசு அதிகம். இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் இந்த சாஃப்ட் ட்ரிங்க், மது மற்றும் மதுவில்லாத பானங்களிலும் சேர்த்து குடிப்பதற்கு பயன்படுகிறது. இந்த பாரம்பரிய ஜிஞ்சர் அலேவை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
பொதுவாக ஜிஞ்சர் அலே, கார்பனேடட் வாட்டர், கார்ன் சிரப், செயற்கை இஞ்சி ஃப்ளேவர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பாரம்பரிய ஜிஞ்சர் அலே மைக்ரோபியல் கல்சரில் வைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் சர்க்கரை, இஞ்சியின் வேர், தண்ணீர் மற்றும் ஃப்ளேவர்ஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
எப்படி தயாரிக்கலாம்:
1. மிக்ஸியில் தேவையான அளவு புதினா மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
2. இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3. ஒரு பெரிய க்ளாஸில் புதினா மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
4. அதில் எலுமிச்சை சாறு மற்றும் சுகர் சிரப் சேர்க்கவும். இவற்றில் சோடா அல்லது கார்போனேட்டட் வாட்டர் ஊற்றி புதினா இலைகளை தூவி அலங்கரிக்கவும்.