மகாராஷ்டிரா ஸ்டைல் போஹா செய்வது எப்படி??

இந்தியாவில் காலை உணவாக பெரும்பாலும் போஹா செய்யப்படுகிறது.  குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் போஹாவுடன் சிறிதளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 16, 2019 11:34 IST

Reddit
Indian Cooking Tips: How To Make Maharashtrian Kanda Poha At Home (Watch Recipe Video)
Highlights
  • மகாராஷ்டிரா ஸ்பெஷலான வெங்காயம் போஹாவை எளிமையாக தயாரிக்கலாம்.
  • புதினா மற்றும் கறிவேப்பிலை சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
  • சில மாநிலங்களில் போஹாவுடன் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.

இந்தியாவில் காலை உணவாக பெரும்பாலும் போஹா செய்யப்படுகிறது.  குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் போஹாவுடன் சிறிதளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது.  பின் இறுதியாக மசாலா பூஜியா சேர்க்கப்படுகிறது.  கோவாவில் போஹாவுடன் தயிர் சேர்க்கப்படுகிறது.  உத்தர பிரதேச மாநிலத்தில் போஹாவுடன் இனிப்பான ஜிலேபி பரிமாறப்படுகிறது.  போஹாவில் கறிவேப்பிலை, நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்து செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.  தற்போது, வெங்காயம், பச்சை பட்டாணி, சிலேண்ட்ரோ, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கடுகு ஆகியவை சேர்த்து ருசியான மகாராஷ்டிரா ஸ்டைல் போஹாவை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  

தேவையானவை: 

அவல் 

வெங்காயம் 

பட்டாணி 

நிலக்கடலை 

பச்சை மிளகாய் 

எலுமிச்சை சாறு 

கடுகு 

கொத்தமல்லி 

கறிவேப்பிலை

மஞ்சள் தூள் 

சர்க்கரை

தேங்காய் துருவல் 

சேவ்

சீரகம் 

உப்பு 

எண்ணெய் 

தண்ணீர் செய்முறை: 

அவலை தண்ணீர் ஊற்றி கழுவிய பின் சிறிது நேரம் ஊற வைக்கவும்.  அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சிறிதளவு நிலக்கடலையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.  

பின் அதே கடாயில் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்த்து தாளித்து கொள்ளவும்.  

ஒரு பௌலில் ஊற வைத்த அவலுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.  கலந்து வைத்த பின் அதனை கடாயில் சேர்த்து தாளிக்கவும்.  

அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கொள்ளவும்.  இறுதியாக அதில் துருவி வைத்த தேங்காய் மற்றும் வறுத்து வைத்த கடலை சேர்த்து சூடாக பரிமாறவும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement