சுவையான ஈவ்னிங் ஸ்நாக் - மீட்பால்ஸ் ரெசிபி

சாஸ் சேர்த்த பின்பு, மீட்பால்ஸ் வறுத்தால், மேலும் சுவையாக இருக்கும

Sushmita Sengupta  |  Updated: July 16, 2018 13:40 IST

Reddit
How To Make Meatballs: Tips and Recipe To Follow For Perfect Meatballs
Highlights
 • ஹோட்டல் டைப் மீட்பால்ஸ், வீட்டிலேயே செய்யலாம்
 • விருப்பமான மீட்பால்ஸ் ஸ்டப்பிங் வைத்து சமைக்கலாம்
 • சான்விச், பாஸ்தா, ஆகியவற்றுடன் மீட்பால்ஸ் சேர்த்து சாப்பிடலாம்

ஹோட்டல் டைப் ஸ்நாக்ஸ், வீட்டிலேயே எளிதாக செய்யலாம். அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் மார்கெட்டில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு கடினமான செய்முறை கொண்ட உணவு வகை போல இருந்தாலும், வீட்டிலேயே மீட்சீஸ்பால்ஸ் செய்யலாம். நமக்கு விருப்பமான ஸ்டப்பிங் வைத்து மீட்பால்ஸ் சமைக்கலாம். செய்வதற்கு நேரம் எடுத்தாலும், மீட்பால்ஸ் சமைப்பதில் ஃபன் நிச்சயம். சான்விச், பாஸ்தா, ஆகியவற்றுடன் மீட்பால்ஸ் சேர்த்து சாப்பிடலாம். சுவையான ஈவ்னிங் ஸ்நாக் செய்வதற்கான குறிப்புகளை பகிர்ந்துள்ளோம்

 
 

மீட்பால்ஸ் செய்யும் போது நினைவில் வைக்க வேண்டியவை

 1. மீட்பால்ஸ் உடன் ப்ரெட் தூள்கள் சேர்த்தால், மொறுகலான மீட்பால்ஸ் தயாரிக்கலாம்

 2. அரைக்கப்பட்ட மட்டனை மீட்பால்ஸ் செய்ய பயன்படுத்த வேண்டும்.

 3. மீட்பால்ஸ் ரோல் செய்வதற்கு முன், ருசி பார்த்து மசலாக்களை சேர்த்து கொள்ளவும்

 4. சாஸ் சேர்த்த பின்பு, மீட்பால்ஸ் வறுத்தால், மேலும் சுவையாக இருக்கும

  Listen to the latest songs, only on JioSaavn.com

  தேவையான பொருட்கள்

 • அரைத்த மட்டன் துண்டுகள் - 300 கிராம்

 • பாலில் ஊற வைத்த பிரெட் தூள்கள்

 • வெங்காயம் - அரை

 • பார்ஸ்லி இலை - சிறிதளவு

 • தைம் இலை- சிறிதளவு

 • ரோஸ்மேரி இலை - சிறிதளவு

 • பூண்டு - 3 பல்

 • சீஸ்

 • உப்பு - தேவையான அளவு

 • ஆலிவ் எண்ணெய்

  செய்முறை

 1. பாத்திரத்தில் பிரட் தூள்களை எடுத்து, அதனுடன் பால் சேர்க்க வேண்டும்

 2. மற்றொரு பாத்திரத்தில்,  முட்டை. உப்பு, பார்ஸ்லி, தைம், ரோஸ்மேரி, சீஸ் ஆகியவை சேர்த்து கலக்கவும்

 3. இதனுடன், மட்டன் சேர்த்து நன்றாக கலக்கவும்

 4. பிறகு, பிரெட் தூள், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்

 5. உள்ளங்கையை நனைத்து, சிறிதளவு கலவையை எடுத்து பாலாக ரோல் செய்யவும்.

 6. 15 முதல் 20 மீட்பால்ஸ் ரோல் செய்து கொள்ளவும்

 7. பேக்கிங் ஷீட் எடுத்து, மீட்பால்ஸை அதன் மேல் வைக்கவும். 20 நிமிடங்களுக்கு,  400 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையில் சுடவும்.

 8. சுவையான மீட்பால்ஸ் தயார். சாஸ் சேர்த்து சாப்பிடலாம்meatball subகுறிப்பு : மீட்பால்ஸ் மீதம் இருந்தால், சாஸ் சேர்த்து பாத்திரதில் வைக்கவும். ஒரு வாரம் வரை, குளிர்சாதன பெட்டியில் மீட்பால்ஸ் வைத்திருக்கலாம். சாப்பிடும் போது சாஸ்பேனில் சூடு செய்து சாப்பிடவும்  Comments  

 About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement