வீட்டிலேயே சேஷ்வான் சாஸ் தயாரிப்பது எப்படி??

காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவை சேர்த்து செய்யக்கூடிய இந்த சேஷ்வான் சாஸை வீட்டிலேயே செய்து காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். 

   |  Updated: September 22, 2019 20:39 IST

Reddit
Cooking Tips: How To Make Preservative-Free Schezwan Sauce At Home
Highlights
  • சைனீஸ் ரெசிபிகளில் சேஷ்வான் சாஸ் சேர்க்கப்படுகிறது.
  • பலவகை ரெசிபிகளுடன் இதனை தொட்டு சாப்பிடலாம்.
  • வீட்டிலேயே மிகவும் எளிமையாக இதனை தயாரிக்கலாம்.

ரோட்டோர கடைகளில் நாம் விரும்பி சாப்பிடக்கூடிய ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறோம்.  அவற்றில் இந்த சேஷ்வான் சாஸ் சேர்க்கப்படுகிறது.  பெரும்பாலான சைனீஷ் ரெசிபிகளில் இந்த சேஷ்வான் சாஸ் சேர்க்கப்படுகிறது.  இந்த சேஷ்வான் சாஸை வீட்டிலேயே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் தயாரிக்க முடியும்.  சிறிதளவு சாதம் அல்லது நூடுல்ஸ், சேஷ்வான் சாஸ், வேகவைத்த இறைச்சி, காய்கறிகள் ஆகியவை சேர்த்து ருசியான ரெசிபியை தயாரிக்க முடியும்.  சிப்ஸ் மற்றும் ஃப்ரைஸுடன் இந்த சாஸ் தொட்டு சாப்பிடலாம்.  பராத்தா ரோல், சூப், இட்லி, தோசை, சப்ஜி மற்றும் கிரேவி போன்ற ரெசிபிகளுடன் இதனை சேர்த்து சாப்பிடலாம். 3c3uosr8
 

மார்கெட்களில் இந்த சேஷ்வான் சாஸ் கிடைக்கும்.  பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரக்கூடிய இந்த சாஸை ஆரோக்கியமாக வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம்.  காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவை சேர்த்து செய்யக்கூடிய இந்த சேஷ்வான் சாஸை வீட்டிலேயே செய்து காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.  இதனை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம். 

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும்.  அடுப்பில் தவா வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கி, அத்துடன் அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.  அதில் சிறிதளவு கார்ன் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.  பின் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.  இந்த சாஸை நன்கு வேக வைக்க வேண்டும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும்.  தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement