இட்லி பொடி செய்வது எப்படி?

Ashwin Rajagopalan  |  Updated: September 04, 2018 14:28 IST

Reddit
How To Make Sensational Gun Powder At Home: A Perfect Recipe For Keeps

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பொடியானது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவில் ஒன்று. இட்லி, தோசை, ஊத்தாப்பம் என இவற்றிக்கு அட்டகாசமான பொருத்தம் இந்த இட்லி பொடி. பயணங்களின் போது புளியோதரை போன்ற கட்டுச் சோறுகள் எடுத்துக் கொள்ளப்படுவதை போல், இட்லியின் மீது எண்ணெய் மற்றும் பொடியை தூவி எடுத்து செல்பவர்களும் உண்டு. கர்நாடகாவில் இட்லி பொடி தயாரிப்பில் தேங்காய் சேர்ப்பதும், ஆந்திராவில் பூண்டு சேர்ப்பதும் வழக்கம். பல பொடி பிரியர்களுக்காகவே இந்த தமிழ்நாட்டு ஸ்டைல் இட்லி பொடி குறிப்பு.

podi 625

தேவையான பொருட்கள்

  • கறுப்பு உளுத்தம் பருப்பு – 1 கப்
  • கடலை பருப்பு – ¼ கப்
  • காய்ந்த மிளகாய் – 10-12 எண்ணிக்கை அல்லது காரத்திற்கேற்ப
  • காயவைக்கப்பட்ட கறிவேப்பிலை – ஒரு கையளவு
  • பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
  • கருப்பு எள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

Comments

  1. மிதமான சூட்டில் கறுப்பு எள்ளை போட்டு வறுக்கவும். எள் பொறிந்து வெடிக்கும் சமயத்தில் வாணலியை இறக்கி தனியே எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில் உளுந்தை போட்டு வறுக்கவும். உளுந்து வறுபட்ட வாசனை வந்த பின் அடுப்பை சிம்மிலேயே வைத்து கடலை பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த அனைத்துப் பொருட்களையும் நன்கு ஆற வைக்கவும்.
  2. மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயுடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். இறுதியாக அதில் எள் சேர்த்து நன்கு பொடிந்து போகாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
  3. சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் இட்லி பொடிகள் வீட்டில் செய்வதை போல் ருசியாக இருக்காது. எளிமையாக செய்யக்கூடியவற்றை வீட்டிலேயே செய்து கொள்ள முயற்சியுங்கள்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement