வீட்டிலேயே செய்யலாம் புளி சட்னி : ஈஸி ரெசிபி

உணவுகளுக்கு சுவை கூட்டுவது மட்டுமின்றி, பல ஊட்டச்சத்துகளையும் கொண்டது

Sarika Rana  |  Updated: June 19, 2018 23:51 IST

Reddit
How To Make Simple Tamarind (Imli) Chutney At Home?
Highlights
 • இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் புளி பயன்படுத்தப்படுகிறது
 • உலகில் உள்ள வெவ்வேறு சமையல் முறைகளில் புளி ஒரு அத்தியாவசம்
 • எளிதாக செய்யக்கூடிய புளி சட்னி சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது

பலருக்கும் விருப்பமான மிட்டாயாக புளிப்பு மிட்டாய்கள் இருந்து வருகிறது, குழந்தை பருவத்தில் சாப்பிட்ட மிட்டாய்களை மீண்டும் சுவைப்பது அரிதாகிவிட்டது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் புளி வைத்திருப்பது வழக்கம். உணவு வகைகளுக்கு சுவை கூட்ட புளி பயன்படுதப்படுகிறது. ஆப்ரிகாவில் உருவான புளி, உலகெங்கிலும் உள்ள உணவு முறைகளுக்கு பரவியுள்ளது. உணவுகளுக்கு சுவை கூட்டுவது மட்டுமின்றி, பல ஊட்டச்சத்துகளையும் கொண்டது.  வயிற்று பிரச்சனைகள், செரிமானம் பிரச்சனை போன்றவற்றுக்கு புளி குணம் அளிக்கும் .

பக்கோடா, சாட், கச்சோரி, சமோசா போன்ற உணவு வகைகளுக்கு புளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  எளிதாக வீட்டிலேயே செய்ய கூடிய புளி சட்னி ஒரு மாதம் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடலாம். சுவையான ஆரோக்கியமான புளி சட்னியை எளிதில் செய்யலாம்

 

tamarind

புளி சட்னி ரெசிபி

 

தேவையான பொருட்கள்

புளி

வெல்லம்

சிவப்பு மிளகாய் பொடி

சீரகப்பொடி

கருப்பு உப்பு

உப்பு

 

செய்முறை

 • தண்ணீரில் புளி சேர்த்து பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.அல்லது 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

 • புளி கலவையை இரண்டு வகைகளில் செய்யலாம். முதலாவதாக, ஊற வைத்த புளி தண்ணீரை வடிகட்ட வேண்டும். புளியில் இருக்கும் சாறுகளை எடுக்க வேண்டும். இரண்டாவதாக, கொதிக்க வைத்த புளியை மிக்ஸ்யில் அரைக்க வேண்டும். பின்பு, வடிகட்ட வேண்டும்.

 • ஒரு கிண்ணத்தில் புளி கலவையை மாற்றி, அதனுடன் வெல்லம் சேர்க்க வேண்டும். பின்பு, வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்

 • பிறகு, சிவப்பு மிளகாய் பொடி, சீரகப்பொடி, கருப்பு உப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டும் என்றால், வெல்லம் அதிகம் சேர்க்கவும்

 • சட்னி போன்ற பதம் வந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கி அறை வெப்ப நிலையில் வரும் வரை வைக்க வேண்டும்

 • குளிர்ந்தவுடன், காற்று போக முடியாத பாத்திரத்தில் மூடி, குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு வைத்து சாப்பிடலாம்.

tamarind chutney imli

குறிப்பு

 • வெல்லத்திற்கு பதிலாக பேரிச்சம்பழம் உபயோகிக்கலாம்

 • இனிப்பாக வேண்டும் என்றால், அதிக வெல்லம் சேர்த்து கொள்ளலாம்

 • கருப்பு உப்பு விருப்ப பொருள்

 

எளிதாக செய்யக்கூடிய புளி சட்னி, வீட்டிலேயே தயாரிக்கலாம்


 
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement