உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான குளுகுளு நீர் மோர்! கிராமத்து பாணியில் எப்படிச் செய்யவது..?

ஆரோக்கியமான, சுவையான நீர் மோர். வெறும் 20 நிமிடத்தில் தயார் செய்யலாம்.

  |  Updated: July 21, 2020 13:44 IST

Reddit
How To Make South Indian Drink - Neer Mor - At Home For Good Digestion

இஞ்சி, மிளகு, கருவேப்பிலை போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுகிறது

Highlights
  • நகர்புறத்தில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே கிராமத்து பாணியில் செய்யலாம்
  • உடல் சூடு, செரிமானக் கோளாறு ஆகியவற்றுக்குச் சிறந்தது
  • இயற்கையானது, ஆரோக்கியம் நிறைந்தது

என்னதான் ரஸ்னா, கோலா பானங்கள் இருந்தாலும், அவையணைத்தும் நீர் மோருக்கு ஈடாகாது. அதுவும் உச்சி வெயிலில் களைப்பில் இருக்கும் போது, நீர் மோர் ஒரு டம்ளர் குடித்தால் போதும், இமயமலை குளிர்ச்சியை வயிற்றில் உணரலாம். இருந்தாலும் நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்கள், கிராமத்து நீர் மோரின் சுவையை உணரமுடியாமல் உள்ளனர். அவர்களுக்காக வீட்டிலியே குளுகுளு நீர் மோர் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
தயிர் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
பொடிசாக நறுக்கிய இஞ்சி -  1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 5-6
கடுகு இலைகள் - 3-4
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மிளகு - 2 டீஸ்பூன் (அல்லது 1 பச்சை மிளகாய்)
சீரகத் தூள் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை(இதையும் படிச்சு பாருங்க:  உடல் எடை குறைக்க அருமையான பானம்..! - 2 நிமிடத்தில் ரெடி!!! )

l9iduel

நீர் மோர் செய்முறை:

1. முதலில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிடையவும். தண்ணீர், இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகு அல்லது பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

2. ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்

3. கடுகு மற்றும் கறிவேப்பிலை நறுக்கி, சீரகத்தூள் சேர்த்து அதன் மேல் மென்மையாக தூவவும்.

4.தேவைப்பட்டால் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

அவ்வளவுதான் குளுகுளு நீர் மோர் ரெடி

கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய் மற்றும் கடுகு சேர்க்கலாம். மிளகு, இஞ்சி மற்றும் சீரகம் சேர்ந்திருப்பதால், செரிமானக் கோளாறுக்கு நீர் மோர் ஒரு சிறந்த பானமாகும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement