ஸ்ட்ரீட் ஸ்டைல் தால் கச்சோரி சாப்பிட ஆசையா?? உங்களுக்கான ரெசிபி இதோ!!

உங்களுக்கு பிடித்த சுவையில் பிடித்த உணவு பொருட்களை கொண்டு கச்சோரி செய்து சாப்பிடலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 16, 2019 13:22 IST

Reddit
Indian Cooking Tips: How To Make Street-Style Dal Kachori At Home
Highlights
  • வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற உணவு கச்சோரி.
  • வெவ்வேறு உணவு பொருட்கள் கொண்டு கச்சோரியை தயாரிக்கலாம்.
  • பொதுவாக கச்சோரி என்றாலே பருப்பு சேர்த்து செய்யப்படுபவை.

இந்தியாவின் சாலையோர கடைகளில் கிடைக்கக்கூடிய உணவு பண்டங்களுள் எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த கச்சோரி.  பருப்புகள் கொண்டு தயாரிக்கப்பட்டு டீப் ஃப்ரை செய்து சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவதே வழக்கமாக இருக்கிறது.  பொதுவாக ப்யாஸ் கச்சோரியில் உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் சேர்த்து செய்யப்படும்.  ராஜஸ்தானின் பாரம்பரிய உணவுகளுள் இதுவும் ஒன்று.  காரம் தவிர்த்து இனிப்பு சேர்த்து செய்யப்படும் மாவா கச்சோரியில் ட்ரை ஃப்ரூட்ஸ், சர்க்கரை, கோயா போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். 



சிக்கன் மற்றும் மட்டன் கீமா கொண்டு மைதாவில் ஸ்டஃப் செய்தும் சாப்பிடலாம்.  உளுந்து அல்லது பாசிப்பருப்பு, இஞ்சி, பூண்டு, பெருங்காயம், சீரகம், சோம்பு, மைதா ஆகியவை சேர்த்து பிரசித்தி பெற்ற கச்சோரியை எப்படி ருசியாக செய்வதென்று பார்ப்போம். 

 

0bs8j3g8

 



மாவு தயாரிக்க தேவையானவை:

மைதா -1 கப்

ரவை – 1 மேஜைக்கரண்டி

உப்பு – ¼ தேக்கரண்டி

நெய் – 2 மேஜைக்கரண்டி

வெந்நீர் – ¼ கப்



ஸ்டஃப் செய்ய தேவையானவை:

உளுந்து – ¼ கப்

நெய் – 1 மேஜைக்கரண்டி

சோம்பு – 1 மேஜைக்கரண்டி

மிளகாய் – 1 தேக்கரண்டி

மாங்காய் பவுடர் – ½ தேக்கரண்டி

உப்பு – ½ தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 மேஜைக்கரண்டி

பெருங்காயம் – ¼ தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவை, உப்பு, நெய் சேர்த்து கலந்து அத்துடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  பின் ஈரத்துணி கொண்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து ஊற வைக்கவும்.

உளுந்தை நன்கு கழுவி வேக வைத்து கொள்ளவும். 

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் நெய், பெருங்காயம், சோம்பு, கொத்தமல்லி, மிளகாய், மாங்காய் பவுடர், உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.  அத்துடன் வேக வைத்துள்ள உளுந்தை சேர்க்கவும். 

மசாலா பொருட்களுடன் சேர்ந்து உளுந்து நன்கு வெந்தபின், ஆற வைக்கவும். 

ஏற்கனவே பிசைந்து வைத்து மாவில் கலந்து வைத்துள்ள மாவை அதில் ஸ்டஃப் செய்து கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும். 

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சுடானதும் ஸ்டஃப் செய்து வைத்துள்ள கச்சோரியை போட்டு பொரித்து எடுக்கவும். 



Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Related Recipe

Advertisement
Advertisement