கீரை கடலைமாவு தோசையை காலை உணவாக சாப்பிடலாம்!!

காலை உணவாக இதனை சாப்பிட ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 24, 2019 12:10 IST

Reddit
High-Protein Diet: How To Make Your Besan Cheela Protein-Rich
Highlights
  • ஆரோக்கியமான உணவுகளை காலை நேரத்தில் சமைப்பது கடினமானது தான்.
  • கடலைமாவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் கடலைமாவும் ஒன்று.

 நாம் காலை சாப்பிடக்கூடிய உணவுதான் நாள் முழுக்க உங்களை ஊட்டச்சத்துடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.  இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பது என்பது கடினமானது.  கடலை மாவு, வெங்காயம், பன்னீர், தக்காளி, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து தோசை செய்தால் நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு கிடைக்கிறது.  க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் கடலைமாவும் ஒன்று.  புரதம் நிறைந்த இந்த தோசையை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  கீரையில் புரதம், வைட்டமின் ஏ, கே, மக்னீஷியம், பொட்டாசியம், ஃபோலேட்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.  கடலைமாவு மற்றும் கீரை சேர்த்து எப்படி தோசை செய்வதென்று பார்ப்போம். qf0f60o 

தேவையானவை: 

கடலைமாவு - 1 கப் 

கீரை - 1 கப் 

வெங்காயம் - 1 

தண்ணீர் - 1/3 கப் 

இஞ்சி பூண்டு விழுது - 1/2 மேஜைக்கரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1 கொத்து 

பச்சை மிளகாய் - 1 

உப்பு - சுவைக்கேற்ப 

நெய்/எண்ணெய்/வெண்ணெய் - சுவைக்கேற்ப 

செய்முறை: 
* கீரையை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். 
* ஒரு பௌலில் கடலைமாவு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.  
* அத்துடன் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
* அடுப்பில் தவா வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.  
* கலந்து வைத்துள்ள கடலை மாவை தவாவில் ஊற்றி தோசை வார்த்து எடுக்கவும். 
* இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.  இதே போல அடுத்தடுத்த தோசைகளை சுட்டு எடுக்கலாம்.  

cd5bc77kஇந்த தோசையின் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி சாப்பிட ருசியாக இருக்கும்.  இத்துடன் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிடலாம்.  காலை உணவாக இதனை சாப்பிட ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement