உடற் கழிவுகளை வெளியேற்ற எளிய வழிகள்

   |  Updated: July 20, 2018 21:18 IST

Reddit
7 Effective Tips To Naturally Detox Your Body

ஆரோக்கியமான மனம், ஒல்லியான ஃபிட்டான உடல், மற்றும் மென்மையான தோல் இவற்றை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த மாதிரியான உடலமைப்பை அடைவதற்கு தொடர்ச்சியான ஓர்க் அவுட் முறையுடன் ஊட்டச்சத்துகள் நிறைந்த டயட்டை பின்பற்றுவது அவசியமானது. இருப்பினும், எல்லாவற்றையும் செய்வதற்கு முன்பு, ஒரு முறையான சுத்திகரிப்பு செயல்முறையை கொண்டு உடலில் இருந்து கழிவுகளை உடனே அகற்றுவது மிக முக்கியம். கடுமையான வேலைச் சுமையால் உடலை டீ டாக்ஸ் செய்ய நாம் மறந்துவிடுகிறோம். 

உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளாத எளிதில் பின்பற்றக்கூடிய 7 பயனுள்ள டீ டாக்ஸ் முறைகள் உங்களுக்காக.

Newsbeep

எலுமிச்சை சாறுடன் சூடான நீர்

சூடான தண்ணீர் மற்றும் ஃபிரெஸ்ஸாக பிழிந்த எலுமிச்சையைக் கொண்டு உங்கள் நாளை தொடங்குங்கள். இந்த மிகச் சிறந்த காம்பினேஷன் உங்கள் உடலில் இருக்கும் நச்சுகளை போக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அதில் துருவிய இஞ்சியையும் சேர்க்கலாம். எலுமிச்சை மற்றும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதை 2-3 நிமிடங்களில் சுலபமாக தயாரித்து விடலாம். சிறந்த உடல் சுத்திகரிப்பிற்கு நீங்கள் இதை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். 

detox drinks

கிரீன் டீ 

டீ காஃபி போன்ற பானங்கள் உங்கள் உடலிற்கு தீங்கு விளைவிக்கிறது. இதன் விளைவுகளைச் சரிசெய்ய, கீரின் டீயை குடிக்கலாம். இது செரிமான மண்டலத்தை சுத்தமாக்குவதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடை இழப்புக்கும் உதவுகிறது.

green tea

பேக் செய்யப்பட்ட ஜூஸ்களை குடிப்பதை தவிர்க்கவும்

பேக் செய்யப் பட்ட பழ சாறுகளில் பிரிஸர்வேட்டிவ்ஸ், சுவை அதிகரிப்புகள், கலர் ஏஜென்ட்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை ஆகியவைகள் இருக்கின்றன. இந்தப் பொருட்கள் அனைத்தும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.அதற்கு பதிலாக, ஃபைபர்கள் நிறைந்த ஃப்ரஷ்ஷான பழ சாறுகள் உடலை சுத்தப்படுத்துவதோடு செரிமானத்தையும் சீர் செய்ய உதவுகிறது.

sugarcane juice for weight loss

நிறைய தண்ணீர் குடியுங்கள் 

எல்லா நேரங்களிலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது முக்கியம். உடலில் உமிழ்நீர் உற்பத்தி செய்ய தண்ணீர் தேவை, வியர்வை  மற்றும் கழிவை நீக்குவதற்கும் தண்ணீர் உதவுகிறது. ஒரு நாளில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தினம் சுமார் 8-10 கப்புகள் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 
போதுமான தூக்கம் கிடைக்கும்.

drinking water

தூக்கம்

உடலை சுத்தம் செய்வதுப் போல மனதை சுத்தம் செய்வதும் அவசியம்.முழு உடலை சுத்தம் செய்வது மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. இரவு தூக்கத்தின் முக்கியதுவத்தை நம்மில் பலர் அறிவதில்லை. நீங்கள் தூங்கும்போது உங்கள் மூளை நச்சுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. எனவே, இரவில் போதுமான அளவு தூங்குங்கள். 
 

sleep

உணவு

தயிர் புரோபயாடிக்குகளின் முக்கிய ஆதாரமாக இருக்கும் ஓர் சிறந்த பொருள்.  இதில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. செரிமான பிரச்சினைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தை இது சுத்தப்படுத்துகிறது. உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை மறக்காதீர்கள். 

yogurt

இலவங்கப்பட்டை - வெந்தயம் 

Listen to the latest songs, only on JioSaavn.com

உங்களது நாளின் இறுதியில் இலவங்கப்பட்டை அல்லது வெந்தய டீ குடியுங்கள். இரவு நேரத்தில் இதை உட்கொள்வதன் மூலம், உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப் படுகிறது. தவிர, செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம் எளிதாக உடலின் கழிவுகளை வெளியேற்றலாம். 

fenugreek

இந்த டிப்ஸ்களை முயற்சி செய்து  உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

Comments



உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement