வாழைப்பழத்தை பழுக்க வைக்க சில வழிகள்

வாழைப்பழத்தில் பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

Sarika Rana  |  Updated: October 31, 2018 19:01 IST

Reddit
How To Ripen Bananas; 4 Simple And Handy Tips

எல்லோருக்கும் பிடித்தமான பழம் வாழைப்பழம். இதில் பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் வாழைப்பழம் அல்சர் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. வாழைப்பழத்தை அப்படியே அல்லது சிப்ஸ், பக்கோடா, அவியல், அல்வா மற்றும் பாயாசம், ஸ்மூத்திஸ், குக்கீஸ், ஐஸ்கிரீம், மில்க் ஷேக்ஸ் போன்றவற்றை செய்து சாப்பிடலாம். வாழைப்பழத்தை எப்படி பழுக்க வைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

banana
 

பேப்பர் பேக்

பழங்களை பழுக்க வைக்க எதிலீன் வாயு நிச்சயம் தேவை. பேப்பர் பேக்கை இன்குபேட்டராக செயல்படுகிறது. பேப்பர் பேக்கில் ஆப்பிள், கிவி, அவகாடோ மற்றும் ஆப்ரிகாட் போன்றவற்றை சேர்த்து அத்துடன் வாழைப்பழத்தை வைத்தால் சீக்கிரம் பழுத்துவிடும்.

paper bag

மைக்ரோவேவ் அவனில் வைக்கலாம்

வாழைக்காயை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு பேக்கிங் ஷீட்டில் வைத்து மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். வாழைப்பழத்தில் தோல் கருப்பு நிறமாக மாறியவுடன் எடுத்துவிடவும். இப்போது வாழைப்பழம் மென்மையாக பழுத்து இருக்கும்.

riped banana

வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்

மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்க விருப்பமில்லை என்றால், ஃப்ரிட்ஜில் மேல் வைக்கலாம். ஃப்ரிட்ஜில் மேல் பகுதி சூடாக இருக்கும் என்பதால் அங்கு வைக்கும்போது பழம் அந்த சூட்டில் பழுத்துவிடும்.

வாழைப்பழத்தை தனித்தனியே வைக்க வேண்டாம்

வாழைப்பழத்தை தனித்தனியே பிரித்து வைக்காமல், சீப்பாக வைத்து பழுக்க விட வேண்டும். ஒரு ஃபாயில் ஷீட்டில் வாழைப்பழத்தை சுற்றி வைக்கலாம். 24 மணிநேரத்தில் பழுத்துவிடும் என்பதால் இந்த முறையை பயன்படுத்தலாம்.

Comments

banana


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com