டாலடிக்கும் கூந்தலுக்கு தேன்!

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பெரும்பாலும் மறந்து விடுகிறோம்

Mannat Arneja  |  Updated: July 20, 2018 21:50 IST

Reddit
How to Use Honey for Hair: The Nutrient Packed Ingredient to Treat Dullness
Highlights
  • Honey is an emollient; it tends to retain moisture in the hair
  • Honey is also rich in antioxidant properties that prevent hair loss
  • Make DIY honey masks to treat dullness

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பெரும்பாலும் மறந்து விடுகிறோம். மாசுபாடுகளால் அதிகம் பாதிப்பது நமது கூந்தல் தான். வலுவான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு, ஈரப்பதம் மற்றும் சரியான ஊட்டச்சத்துகள் தேவை. 

மாசுபடு மட்டுமமே பலவீனமான கூந்தலுக்கு காரணமாகாது, கண்ணில் பார்க்கும் ஒவ்வொரு புதிய பொருட்களையும், தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. 

hair fall

இயற்கை பொருட்களே உங்கள்  தலைமுடிக்கு மிகவும் பொருத்தமானவையாகும், ஏனெனில் அவை இயற்கையான ஊட்டச்சத்துக்களை எந்த பக்கவிளைவுகளும் இன்றி கூந்தலுக்கு அளிக்கின்றன. அழகான கூந்தலுக்கு தயிர், முட்டை  போன்றவற்றை உபயோகிக்கலாம். அதோடு இயற்கையான தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். 


honey

இதன் ஆன்டி - பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப் பிரச்னைகளை தவிர்க்கும். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

1. தேன் தயிர் ஹேர் மாஸ்க்: 

தயிரில் நிறைய புரோட்டீன் சத்து இருக்கிறது. தேன் உங்கள் கூந்தலை என்றும்  பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்து கொள்கிறது . இது வறண்ட மற்றும் டல்லான கூந்தலுக்கு ஏற்றது. 
 honey hair mask

தேவையான பொருட்கள்:

  • 2 டீஸ்பூன் தேன்
  • 4 டீஸ்பூன் தயிர்

செய்முறை:

தேன் மற்றும் தயிரை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.  பின்னர் அதை உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்யவும். முடிந்தவரை உச்சந்தலையில் எல்லா  இடங்களிலும், முடியின் அடி வரையிலும் அப்ளை செய்யவும். தலையை ஒரு துண்டால் கவர் செய்துகொள்ளவும், 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு 
உங்கள் கூந்தலை அலசி நன்கு காற்றில் உலர்த்தவும். வேறு எந்த சூடான முடி ஸ்டைலிங் கருவியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
 

honey hair mask

2. தேன் முட்டை மாஸ்க்

முட்டயில் அத்தியாவசியமான புரோட்டீன்ஸ் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இது சிறந்த கூந்தல்  மாஸ்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது, தேன் கூந்தலை மென்மையாக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

Listen to the latest songs, only on JioSaavn.com

  • 2 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
  • 3 டீஸ்பூன் தேன் 
  • 2 முட்டை

செய்முறை:

முட்டைகளையும் எண்ணெயையும் சேர்த்து கலக்கவும், பிறகு மெதுவாக தேன் சேர்த்து தலையில் அப்ளை செய்யவும். சுமார் 60 நிமிடங்கள் உங்கள் தலைமுடியை ஒரு டவலால் கட்டிக்கொள்ளவும். பிறகு ஷாம்பு கொண்டு கூந்தலை முட்டை  வாசம்  மற்றும் எண்ணெய் போக அலசவும்.  இது மிகவும் மென்மையான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலைத் தரும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement