லெமன் ஃபேஸ் ஸ்க்ரப் !

பிற மொழிக்கு | Read In

   |  Updated: December 07, 2018 14:21 IST

Reddit
Lemon Scrub For Face: How To Use Lemon Scrub For Oily, Dry And Normal Skin

எலுமிச்சை சாறு சருமத்தில் சில அதிசயங்களை நிகழ்த்தக்கூடியது. 100 கிராம் எலுமிச்சை சாற்றில் 53 கிராம் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எல்லாவகை சருத்திற்கும் ஏற்றதாக இருக்கும். எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். எலுமிச்ச சேர்த்து முகத்திற்கான ஸ்க்ரப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்தால், முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாவதோடு சருமத்தின் நிறம் கூடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும்.

தேவையானவை

  • எலுமிச்சை சாறு – 6 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி

செய்முறை

  1. ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.
  2. இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் வட்டமாக தேய்த்து மசாஜ் செய்யலாம்.
  3. சர்க்கரை கரையும் அளவிற்கு முகத்தில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
  4. ஸ்க்ரப் செய்து முடித்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

குறிப்பு: கரும்புள்ளிகள் மற்றும் கருமைநிறத்தை போக்க இந்த ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.

வறண்ட சருமத்திற்கு – தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஸ்க்ரப்

தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள வறண்ட செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்கிவிடும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் -1/2 கப்
  • சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

  1. ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
  2. இந்த ஸ்க்ரபை முகத்தில் 8-10 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும்.
  3. மசாஜ் செய்து முடித்தபின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
  4. எண்ணெய் சருமத்திற்கு – தேன், பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
  5. முகப்பருக்களை விரட்ட முகத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும். எலுமிச்சை, பேக்கிங் சோடா இரண்டும் முகத்திற்கு நேச்சுரல் க்ளென்சராக செயல்படுகிறது. தேனில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.

தேவையானவை

  • எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
  • தேன் – 1 மேஜைக்கரண்டி
  • பேக்கிங் சோடா – ½ மேஜைக்கரண்டி

செய்முறை

Comments

  1. ஒரு பௌலில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. இந்த ஸ்க்ரபை முகத்தில் 3-4 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யலாம்.
  3. மசாஜ் செய்து முடித்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement