உடல் எடையைக் குறைக்க உதவும் வெங்காயம்... எப்படினு தெரிஞ்சுக்கோங்க..?

ஆனியன் ஜூஸ் குடித்து வர, உடல் பருமன், முடி கொட்டுதல், சருமப் பிரச்சனைகள் சரியாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

  |  Updated: July 23, 2020 12:21 IST

Reddit
How To Use Onion Juice For Immunity, Weight Loss And More

ஆனியன் ஜூஸில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளன

Highlights
  • எளிமையான முறையில் வெங்காய ஜூஸ் செய்ய முடியும்
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • முடி கொட்டுதல், சருமப் பிரச்சனைகளுக்கு உகந்தது

வெங்காயத்தைக் கொண்டு சுவையாக ஆனியன் ஜூஸ் செய்வது எப்படி? அதிலுள்ள பலன்கள் ஊட்டச்சத்துக்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம். 

வெங்காயம் என்பது உடல் சூட்டைத் தணிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதில் இன்னும் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக உடல் எடையைக் குறைக்கும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. அதற்காக வெங்காயத்தை மட்டுமே வைத்து என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான ரெசிபி உள்ளது. அதுதான் ஆனியன் ஜூஸ். 

ஆனியன் ஜூஸ் எப்படி செய்ய வேண்டும்?
முதலில் வெங்காயத்தை உரித்து, மெல்லிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைக்க வேண்டும். அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். அவ்வளவுதான் ஆனியன் ஜூஸ் ரெடி. இதனை காலை வேளையில் குடிக்கலாம்.

ஆனியன் ஜூஸில் கிடைக்கும் பலன்கள்:
உடல் எடை குறைப்பு:
வெங்காயத்தில் மிகக்குறைந்த அளவே கொழுப்பு சத்து உள்ளது. அத்துடன் ஆண்டிஆக்ஸிடெண்ட் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம். வெறும் வயிற்றில் வெங்காயம்-தேன் குடித்தால், தொப்பை வராது. 

நோய் எதிர்ப்புச் சக்தி:
வெங்காயத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதிகமாக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் காபி, டீக்குப் பதிலாக வெங்காய ஜூஸ், மூலிகை டீ போன்றவற்றைக் குடிக்கலாம்.
 

Newsbeep

(Also Read: How To Make Ginger-Garlic Tea For Immunity And Weight Loss)

Listen to the latest songs, only on JioSaavn.com

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைக்கு:

நமது சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைக்கு ஆனியன் ஜூஸ் சிறந்த தீர்வாக அமைகிறது. சாதாரணமாக முகத்தில், தலையில் வெங்காயத்தை தடவுவதை விட, ஆனியன் ஜூஸ் குடித்தால் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

முடிந்தால் வெறும் கையால் வெங்காயத்தை நசுக்கி சாறு பிழிந்து அவற்றைக் குடிக்கலாம். மேலும், லெமன் ஜூஸ் செய்யும் போது அதிலும் வெங்காயச் சாறை சேர்த்துப் பருகலாம்.

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement