குழந்தைகள் விரும்பி சாப்பிட சுரைக்காயை இப்படி செய்து தாருங்கள்!!!

காய்கறிகளில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.  அதேபோல அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 02, 2019 11:49 IST

Reddit
Here's How You Can Make Lauki (Bottle Gourd) Interesting For Your Kids
Highlights
  • பெரும்பாலான குழந்தைகளுக்கு காய்கறிகளை சாப்பிட பிடிப்பதில்லை.
  • சுரைக்காயில் ருசி குறைவாக இருந்தாலும் சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
  • சுரைக்காயுடன் சில மசாலா பொருட்களை சேர்த்து ருசியாக செய்து சாப்பிடலாம்.

பொதுவாகவே குழந்தைகளின் உணவு பழக்கம் என்பது அதிரிபுதிரியாகத்தான் இருக்கும்.  நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பார்த்திருப்போம்.  ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், மற்ற உணவு வகைகளை சாப்பிடாமல் எப்போதும் நொருக்கு தீனி சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.  அவர்களின் ஆரோக்கியம் இதனால் கெட்டு போகிறது.  அதனால் ஆரோக்கியம் நிறைந்த உணவை அவர்கள் விரும்பும் ருசியில் செய்து கொடுப்பது என்பது எல்லா தாய்மார்களுக்கும் பெரிய சவாலாக இருக்கும்.  அதற்கு தீர்வு சொல்லவே இந்த கட்டுரை.  காய்கறிகளில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.  அதேபோல அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளது.  சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.  சுரைக்காயை வைத்து செய்யக்கூடிய சில சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிகளை பார்ப்போம். ஸ்டஃப்டு லௌக்கி:

சுரைக்காயை தோல் சீவி, அதனை எலுமிச்சை சாற்றில் ஊறவைக்கவும்.  பின் அதில் காட்டேஜ் சீஸ் சேர்த்து ஸ்டஃப் செய்து சாப்பிடலாம்.  இதனை மதிய உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.  சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட முழு ஆரோக்கியம் கிடைக்கும். stuffed lauki

 

தூதி கா அல்வா:

குழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் சுரைக்காய், சோயா மில்க், வெல்லம், சேர்த்து அல்வா செய்து கொடுக்கலாம்.  மார்கெட்களில் கிடைக்கும் இனிப்பு பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் இராசயணங்கள் இருக்கிறது.  இந்த அல்வா உடலுக்கும் நல்லது.  நாவிற்கு பிடித்தாற் போல ருசியாகவும் இருக்கும். Listen to the latest songs, only on JioSaavn.com

லௌக்கி ரெய்தா:

பூந்தி ரெய்தா சாப்பிட்டு அலுத்துவிட்டதா? சுரைக்காய் கொண்டு ரெய்தா செய்து சாப்பிடலாம்.  இதனை மதிய உணவுடன் அல்லது இரவு உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.  உங்களுக்கு பிடித்தார்போல இதில் சில மசாலா பொருட்களை சேர்த்தும் சாப்பிடலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement