சோர் க்ரீம் சேர்த்து தயாரிக்கப்படும் 4 ரெசிபிகள்!!

ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் மெக்சிகன் உணவுகளில் சோர் க்ரீம் சேர்க்கப்படுகிறது.  தற்போது பரவலாக இந்திய உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 14, 2019 17:16 IST

Reddit
Here’s How You Can Use Sour Cream To Make Some Delicious Meals
Highlights
  • டிப் மற்றும் சாஸ் போன்றவற்றிற்கு சோர் க்ரீம் சேர்த்து கொள்ளலாம்.
  • பெரும்பாலான மெக்ஸிகன் உணவுகளில் சோர் க்ரீம் சேர்க்கப்படுகிறது.
  • சோர் க்ரீம் சேர்த்தால் உணவின் ருசி அதிகரிக்கும்.

எப்படிப்பட்ட ரெசிபிகளையும் ருசியானதாக்க சோர் க்ரீம் சேர்த்து கொள்ளலாம்.  ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் மெக்சிகன் உணவுகளில் சோர் க்ரீம் சேர்க்கப்படுகிறது.  தற்போது பரவலாக இந்திய உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.  க்ரீம் சேர்க்கப்படும் உணவுகளில் சிலவற்றை பார்ப்போம்.

சிக்கன் மலாய் கபாப்: 

சிக்கனை மசாலா சேர்த்து பேக் செய்தால் அதன் ருசியும் மணமும் அருமையாக இருக்கும்.  அத்துடன் மொஸரெல்லா சீஸ், க்ரீம் சீஸ் மற்றும் சோர் க்ரீம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.  

chicken kebab

 மெக்ஸிகன் புரிட்டாஸ் :

மெக்ஸிகன் உணவுகளுள் பிரபலமான உணவு.  இந்தியாவில் சப்பாத்தி ரோல் போன்றதொரு ரெசிபி தான் இந்த புரிட்டாஸ்.  ராஜ்மா, வெங்காயம், தக்காளி, டொமேட்டோ சாஸ் மற்றும் சோர் க்ரீம் சேர்த்து, கார்ன் டார்டிலாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

burritos 625

 ஸ்பேனிஷ் ஆம்லெட்:

தினமும் காலை உணவாக ஆம்லெட் சாப்பிட்டு வரலாம்.  ஆம்லெட்டில் உருளைக்கிழங்கு சேர்த்து ஸ்பேனிஷ் ஆம்லெட் ரெசிபியை நாச்சோஸ், சோர் க்ரீம் சேர்த்து சாப்பிடலாம்.  

spanish omelette

 

புதினா பட்டாணி சூப்:

பட்டாணி, புதினா மற்றும் சோர் க்ரீம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப் ருசியாக இருப்பதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சூப் ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement