உயர் இரத்த அழுத்தத்துக்கு இந்த பானங்களை குடித்தாலே போதும்.. இதில் 5-வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.!

உயர் இரத்த அழுத்த உணவு : உணவுகள் உங்கள் இரத்த அழுத்த எண்ணிக்கைகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உங்கள் உணவை நீங்கள் கண்காணித்தல் வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அற்புதமான நன்மைகள் நிறைந்த சில ஆரோக்கியமான பானங்கள் இங்கு பார்க்கலாம்.

Translated by: Ragavan Paramasivam  |  Updated: November 02, 2019 09:55 IST

Reddit
Hypertension Diet: Control Your Blood Pressure Numbers With These Healthy Drinks

உயர் இரத்த அழுத்தம்: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்

Highlights
  • உயர் இரத்த அழுத்தம் உங்களை இதய நோய்களுக்கு அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது
  • உங்கள் இரத்த அழுத்த எண்ணிக்கையை தவறாமல் சரிபார்க்க வேண்டும்
  • ஆரோக்கியமான பழச்சாறுகள் குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்

Hypertension அல்லது உயர் இரத்த அழுத்தமானது silent killer என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இதன் ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காணமுடிவதில்லை. உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பல சுகாதார பிரச்சினைகள் உள்ளன. கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்கள் உணவு உங்கள் இரத்த அழுத்தத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும். மற்ற சில உணவுகள் அதைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவலாம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான வழியாகும். நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ளும் திரவங்கள் உணவுகள் உங்கள் இரத்த அழுத்த எண்ணிக்கைகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உங்கள் உணவை நீங்கள் கண்காணித்தல் வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அற்புதமான நன்மைகள் நிறைந்த சில ஆரோக்கியமான பானங்கள் இங்கு பார்க்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பானங்கள் (drinks)

1. மாதுளை சாறு - Pomegranate juiceநாம் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான பழச்சாறுகளில் இதுவும் ஒன்றாகும். இது சுகாதார நன்மைகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மாதுளை சாறு உதவும். 2012-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒரு கப் மாதுளை சாற்றை 28 நாட்களுக்கு உட்கொண்டதால் இரத்த அழுத்த எண்ணிக்கை குறைந்துள்ளது. நீங்கள் புதிதாக (fresh) தயாரிக்கப்பட்ட மாதுளை சாற்றை குடிக்க வேண்டும். பாக்கேட் செய்யப்பட்ட பழச்சாறுகள் சர்க்கரை மற்றும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

27dqf1e8

High Blood Pressure Diet: Pomegranate juice contains properties beneficial for high blood pressure
Photo Credit: iStock

2. கிரீன் டீ - Green tea

கிரீன் டீ பொதுவாக எடை இழப்புக்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். கிரீன் டீ சுகாதார நன்மைகள் நிறைந்தவை. கிரீன் டீயை தவறாமல் உட்கொள்வதும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அதோடு மற்ற அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ வரை குடிக்கலாம், ஆனால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

Also read: High Blood Pressure Remedies: These Teas Can Lower Your Blood Pressure Numbers Naturally

3. பீட்ரூட் சாறு - Beetroot juice

பீட்ரூட் சாறு மற்றொரு ஆரோக்கியமான பானமாகும், இது ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது பொட்டாசியத்தின் ஒரு அற்புதமான மூலமாகும். இரத்த அழுத்த எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. பீட்ரூட் சாற்றில் இருக்கும் நைட்ரேட்டுகள் (Nitrates) இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.

Also read: Blood Pressure: Know Your Numbers! Reasons Why You Must Keep A Track Of Your Blood Pressure Numbers

4. அன்னாசி பழச்சாறு - Pineapple juice

அன்னாசி பழச்சாற்றில் இருக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. அன்னாசி பழச்சாறு பல்வேறு வழிகளில் ஆரோக்கியமானது. இது இருமலுக்கு நன்கு அறியப்பட்ட தீர்வாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அன்னாசி பழச்சாறு குடிக்கலாம். இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்கும். இதில் சோடியமும் குறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு இது நன்மை பயக்கும்.

tfrs36ag

Hypertension control: Pineapple juice is rich in potassium which lowers blood pressure naturally
Photo Credit: iStock

5. நீர் - Water

ஆம்.! தண்ணீர். நீங்கள் உட்கொள்ளக்கூடிய சிறந்த திரவம் இது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் பல நோய்களின் ஆபத்து குறைகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது எளிய மற்றும் மலிவான வழியாகும். ஒரு நாளில் போதுமான தண்ணீரைக் குடித்துவிட்டு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

Also read: Hypertension Prevention: Try Cardamom To Control High Blood Pressure, Here's How It Works

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement