இரத்த அழுத்தத்தை சீராக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ்!!!!

அந்தோசையனின் என்னும் பொருள் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, டீ, ஆப்பிள், ஆரஞ்சு சாறு ஆகியவற்றில் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 19, 2019 12:32 IST

Reddit
Hypertension Diet: These Flavonoid-Rich Foods And Drinks May Prevent High Blood Pressure

உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்த குழல்களின் சுவர்களில் இரத்த அதிகபடியான அழுத்தத்தோடு பாய்வதாகும்.  உடலில் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது 120/90 ஆகவும், உயர் இரத்த அழுத்தமானால் 140/90 ஆகவும் இருக்கும்.  உயர் இரத்தத்தால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  இதனால் பயப்பட தேவையில்லை.  இதனை சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சியால் குணப்படுத்திவிடலாம்.  கொழுப்பு மற்றும் சோடியம் குறைவான உணவுகளே உயர் இரத்த அழுத்தத்திற்கு சரியான தேர்வு.  மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக சில உணவுகளாலும், பானங்களாலுமே இதனை சரிசெய்யலாம்.  அப்படிப்பட்ட உணவுகளில் முக்கியமானது ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி.  இவை இரண்டிலுமே ஃப்ளேவனாய்ட்ஸ் நிறைந்திருக்கிறது என்பதால் இருதய ஆரோக்கியம் மேம்படும். 

The American Journal of Clinical Nutrition வெளியிட்ட தகவலின்படி, ஒரு லட்ச பெண்கள் மற்றும் 23,043 ஆண்களை மூன்று விதமாக ஆய்வுக்குட்படுத்தினர்.  14 வருடங்கள் தொடர்ச்சியாக ஃப்ளேவனாய்ட் நிறைந்த உணவுகளை உட்கொண்டவர்களுள் 29,018 பெண்களுக்கும், 5629 ஆண்களுக்கும் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது.  இதன்மூலம் அந்தோசையனின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் 8% சதவிகிதம் குறைவதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்தோசையனின் என்னும் பொருள் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, டீ, ஆப்பிள், ஆரஞ்சு சாறு ஆகியவற்றில் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

டீயில் ஃப்ளேவன் -3- ஆல்ஸ் இருக்கிறது.  ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசையனின் இருக்கிறது.  சிட்ரஸ் பழங்களில் ஃப்ளேவனான் இருக்கிறது.  ஃப்ளேவனாய்ட் உணவுகளில் ஆண்டி-ஹைபர்டென்சிவ் குணங்கள் மற்றும் அந்தோசையனின் இருப்பதால் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.  இதன்மூலம் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement