உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் செஸ்ட்நட்

ஒருவகை கிழங்கான இந்த செஸ்ட்நட்டில் பொட்டாஷியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்திருக்கிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 22, 2018 14:30 IST

Reddit
Hypertension? Here's How Water Chestnuts Or Singhara May Help Manage BP

ஒருவகை கிழங்கான இந்த செஸ்ட்நட்டில் பொட்டாஷியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்திருக்கிறது. இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் இருதய நோய்கள் மற்றும் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இதில் கலோரிகள் மிக குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராகும். இதனை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.

இரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கிறது?
100 கிராம் செஸ்ட்நட்டில் 584 கிராம் பொட்டாஷியம் இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? இந்த பொட்டாஷியம் உடலில் உள்ள சோடியத்தின் தீமைகளை குறைத்து உடலில் நீர்சத்தை சீராக வைத்திருக்கும். சோடியத்தை சிறுநீர் வழியே வெளிவர செய்யும் தன்மை இந்த செஸ்ட்நட்டிற்கு உண்டு. பொட்டாஷியம் உங்கள் இரத்த நாளங்களை தளர்வடைய செய்யும். ஆனால் சோடியம் இரத்த நாளங்களில் அழுத்தத்தை கொடுத்து உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் பொட்டாஷியம் நிறைந்த உணவை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் இருதயம் பலப்படும்.
 

o7cv9po
 

 

எப்படி சாப்பிடுவது?
இதனை ஃப்ரை செய்து சாப்பிடலாம் அல்லது அரைத்து சாப்பிடலாம். அப்படியே சாப்பிட எண்ணினால் இளம்பச்சையாக அல்லது மேற்புறத்தில் ப்ரௌன் நிறத்தில் இருப்பவற்றை தேர்வு செய்து சாப்பிடலாம். மேலுள்ள தோல் உறித்து சாப்பிட வேண்டும். இதனை வேகவைத்தும் சாப்பிடலாம். இரண்டு வாரத்திற்கு மேல் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement