உயர் இரத்த அழுத்ததை குறைக்கும் ஆரஞ்சு ஜூஸ்!

வைட்டமின் சி இரத்த அழுத்ததை குறைக்கும் தன்மைக் கொண்டது என பல ஆய்வுகள் கூறியிருக்கிறது

Sarika Rana  |  Updated: December 07, 2018 15:51 IST

Reddit
Hypertension: Orange Juice May Help Manage High Blood Pressure Levels

கிளவ்லேண்ட் கிளினிக் நடத்திய ஆய்வில் கலந்துக்கொண்டவர்கள் தினசரி இரண்டு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொண்டு வர, அவர்கள் உயர் இரத்த அழுத்தம் சீராக குறைய தொடங்கியிருக்கிறது. இரண்டு வார இறுதி முடிவில் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் சீராக குறைந்து நார்மல் அளவுக்கு வந்துள்ளதை கண்டரிந்துள்ளனர்.

Comments

orange juice

எப்படி ஆரஞ்சு இரத்த அழுத்ததை குறைக்கிறது?

  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறையிருக்கிறது. வைட்டமின் சி இரத்த அழுத்ததை குறைக்கும் தன்மைக் கொண்டது என பல ஆய்வுகள் கூறியிருக்கிறது. மேலும் தினசரி மினரல் தேவைகளில் 8 சதவீதத்தை பூர்த்திசெய்கிறது.
  • பொதுவாக சிட்ரஸ் பழங்கள் பைட்டோகெமிகலான சிட்ரஸ் ப்யோபீலிவனாய்ட்ஸை( bioflavonoids) உற்பத்தி செய்யும். இதில் ஒரு வகையாக ப்யோபீலிவனாய்ட் தான் ஆண்டிஆக்ஸிடண்டுகளை உருவாக்கும். இவை தான் இரத்த அழுத்தம் குறைப்பது முக்கியபங்கு வகுக்கிறது.
  • ஆரஞ்சு சாறு வைட்டமின் பி ஃபோலேட்டை ( folate) கொண்டுயிருக்கிறது. மேலும், அமெரிக்காவின் மருத்துவ ஊட்டசத்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வில், இளம் வயதில் அதிக அளபில் ஃபோலேட்டை எடுத்துக்கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணுக்கு , 20 ஆண்டுக்கு பின்னர் வர தொடங்கும் உயர் இரத்த அழுத்ததுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது அந்த ஆய்வு.
  • ஒரு கிளாஸ் ப்ரெஷான ஆரஞ்சு ஜூஸில் 20 சதவீதம் வைட்டமின் பி ஃபோலேட் இருக்கிறது. ஆரஞ்சு ஜுஸை முடிந்த அளவுக்கு வீட்டில் ப்ரெஷாக சுகர் சேர்க்காமல், செய்தவுடனே குடிப்பது அவசியம்.
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com