ஹைதராபாத் பிரியாணி பிரியரா நீங்கள்? அப்போ இந்த உணவை ட்ரை பண்ணி பாருங்க!

'காட்டி' என்பது 'புளிப்பு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த பருப்பு ஒரு புளிப்பு, அடர்த்தியான கெட்டியான கறி, இதை மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு (அர்ஹார் பருப்பு) கொண்டு செய்யலாம்.

NDTV Food  |  Updated: March 25, 2020 19:30 IST

Reddit
Hyderabadi Biryani: If You Love It, Give This Hyderabadi Khatti Dal A Try

ஹைதராபாத் காட்டி புளிப்பான, கெட்டியான பதம் கொண்ட உணவு.

Highlights
  • ஹைதராபாத் உணவு அதன் உயர்தர, சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது
  • ஹைதராபாத் பிரியாணி மற்றும் ஹலீம் ஆகியவை மிகவும் பிரபலமான உணவுகள்
  • இந்த சுவையான ஹைதராபாத் காட்டி பருப்பை வீட்டில் முயற்சி செய்து பார்க்கவும்

ஹைதராபாத் உணவைப் பற்றி நாம் பேசும்போது, ​​மிகவும் பிரபலமான மற்றும் எப்போதும் பிடித்த ஹைதராபாத் பிரியாணி நினைவுக்கு வருகிறது. ஆனால், ஹைதராபாத் உணவு என்பது பிரியாணி மற்றும் ஹலீம் ஆகியவற்றை விட இன்னும் பல உள்ளன. இந்த உணவு முக்கியமாக முகலாய, பெர்ச்சியன், துருக்கியை மற்றும் அரபி உணவு வகைகளையும் சார்ந்துள்ளது. ஆச்சரியப்படுவதற்கில்லை, ஹைதராபாத்தின் உணவு சுவைகள் மற்றும் உணவு மரபுகள் அதன் அனைத்து உணவுகளிலும் ஒன்றாக வருவதால் மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது. நீங்கள் ஹைதராபாத் பிரியாணியை விரும்பினால், நீங்கள் ஹைதராபாத் காட்டி பருப்பையும் நேசிப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

'காட்டி' என்பது 'புளிப்பு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த பருப்பு ஒரு புளிப்பு, அடர்த்தியான கெட்டியான கறி, இதை மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு (அர்ஹார் பருப்பு) கொண்டு செய்யலாம். இந்த உணவு புளியைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. அதனால், இந்த உணவுக்கான புளிப்பு தன்மையும் கிடைக்கிறது. இந்த உணவு எப்படிச் செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

0m3h58ao

தேவையான பொருட்கள்:

அரை கப் துவரம் பருப்பு அல்லது அர்ஹார் பருப்பு
அரை கப் தக்காளி, நறுக்கியது
உங்களுக்கு விருப்பமான 1 தேக்கரண்டி எண்ணெய்
சுவைக்கேற்ப உப்பு
அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
2 பச்சை மிளகாய், நறுக்கியது
2 சிறிய புளி, தண்ணீரில் ஊர வைத்தது

தாளிக்க:

1 தேக்கரண்டி நெய் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்)
அரை தேக்கரண்டி கடுகு
3 பூண்டு பற்கள், நறுக்கியது
அரை தேக்கரண்டி சீரகம்
2 உலர்ந்த சிவப்பு மிளகாய்
5 கறிவேப்பிலை

செய்முறை:

Listen to the latest songs, only on JioSaavn.com

  • ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் தக்காளி, மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, சிவப்பு மிளகாய்த் தூள் மற்றும் பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் வதக்கவும்.
  • தக்காளி மசிந்ததும், பருப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
  • பருப்பு வெந்தவுடன், குக்கரைத் திறந்து புளி கரைச்சலை அதில் சேர்க்கவும்.
  • இப்போது, ஒரு சிறிய குழம்பு பாத்திரத்தில், நெய் ஊற்றவும், பிறகு கடுகு சேர்த்துப் பொரிக்கும் வரை காத்திருக்கவும்.
  • அதன்பிறகு, சீரகம், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
  • வதக்கிய அனைத்தையும், பருப்புடன் சேர்த்து, கிளறி பரிமாறவும்.

குறிப்பு: கொத்தமல்லி இலைகளைப் பருப்பை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம்.

இந்த உணவு ரொட்டி, சப்பாத்தி மற்றும் பிரியாணியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement