ஜிஞ்சர் ஐஸ் டீயை குடித்து கோடையை கொண்டாடுங்கள்!!

செர்ரி மற்றும் இஞ்சி சேர்த்த ஐஸ் டீ உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 06, 2019 18:33 IST

Reddit
Summer Drink: Immunity-Boosting Cherry And Ginger Iced Tea To Stay Healthy This Summer
Highlights
  • செர்ரி இஞ்சி டீயில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது.
  • ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை கொண்டது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு புத்துணர்வுடன் வைக்கிறது.

கோடை வெப்பத்தை சமாளிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும், புத்துணர்வுடன் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியம் நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும்.  செர்ரி மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஐஸ் டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  செர்ரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.  

நோய் தொற்று: 
செர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.  நோய் தொற்று காரணமாக ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.  

42tc96f

 

சரும பராமரிப்பு: 
ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவை சாப்பிடுவதால் சருமம் பிரகாசிப்பதுடன், இளமை தோற்றம் தக்கவைக்கப்படுகிறது.  செர்ரி பழச்சாறு குடிப்பதால் பருக்கள், எக்ஸீமா மற்றும் வல்காரிஸ் போன்ற சரும நோய்களில் இருந்து விடுபடலாம்.  செர்ரியில் வைட்டமின் ஏ இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.  


தூக்கமின்மை: 
செர்ரியில் மெலடோனின் என்னும் இரசாயனம் இருப்பதால் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறது.  மனதை ஆற்றுப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.  


உடல் எடை: 
செர்ரியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு உகந்தது.  மேலும் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும்.  


Listen to the latest songs, only on JioSaavn.com

cherry tea

 நீரிழிவு நோய்: 
செர்ரியில் பொட்டாஷியம் இருப்பதால் நீரிழிவு நோயை சீராக வைக்கிறது.  
Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement