அடர்த்தியான கூந்தலுக்கு இவற்றை பயன்படுத்துங்கள்

சீயக்காய், பூந்திக்கொட்டை, நெல்லி ஆகிய மூன்றும் கூந்தல் பராமரிப்பிற்காக இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்

  |  Updated: October 03, 2018 22:20 IST

Reddit
Haircare: Include Amla, Reetha And Shikakai For Healthy And Happy Hair

தலைமுடி பராமரிப்பு என்று வந்து விட்டால் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஒவ்வொன்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் மற்றும் ஷாம்புவிற்கு முக்கிய பங்கு உண்டு. பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயை விட நாம் பயன்படுத்த தேர்வு செய்யும் ஷாம்புவில் தான் பிரச்சனைகள் ஒளிந்திருக்கின்றன. மார்க்கெட்களில் தற்போது ஏராளமான ஷாம்புகள் விற்பனைக்கு வந்து விட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. வறண்ட தலைமுடிக்கு, வலுவலுப்பான கூந்தலுக்கு, அடர்த்தியான அல்லது வலுவிழந்த கூந்தலுக்கு என தனித்தனியே பல ஷாம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Newsbeep

சிலர் தங்கள் கூந்தல் எப்படிபட்டதென்பதை கூட அறியாமல், கண்ட ஷாம்புகளையும் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர். ஷாம்புகளில் மிகவும் கடினமான இரசாயணங்கள் நிறைந்திருக்கின்றன என்பதால் இதுவே தலைமுடி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகி விடும். உங்கள் கூந்தலை எவ்வித இரசாயணங்களும் இல்லாமல் ஆரோக்கியமாக பராமரிக்க சில இயற்கை பொருட்கள் உள்ளது. சீயக்காய், பூந்திக்கொட்டை, நெல்லி ஆகிய மூன்றும் கூந்தல் பராமரிப்பிற்காக இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகபடியாக இருப்பதால் உங்கள் கூந்தலை உறுதியாக இருக்க செய்யும். தலைமுடி வளர செய்யும் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் கூந்தல் அடர்த்தியாகவும் உடையாமலும் இருக்கும். தினமும் நெல்லிக்காயை உணவில் அல்லது வெளிப்பிரயோகமாக பயன்படுத்தி வர தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதோடு இளநரையையும் தடுக்கும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர முடி உதிர்வு தடுக்கப்படும். ஆண்களுக்கு வலுக்கை விழாமல் இருக்கும்.

amla

பூந்திக்கொட்டை

பூந்திக்கொட்டையில் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை பயன்படுத்தி தலைமுடியை அலசும் போது ஸ்கால்பில் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்று தடுக்கப்படும். ஷாம்புவை போல இதிலும் இயற்கையாகவே நுரை வரும்.

சீயக்காய்

சீயக்காயில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் தலைமுடி அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக செழித்து வளர உதவும். உடலில் உள்ள PH அளவை குறைத்து, தலைப்பகுதியில் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய் பசையை தக்கவைக்கும். தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீயக்காய் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தும்போது ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலை பெற முடியும். இவற்றை வாங்கி ஊறவைத்து பயன்படுத்தலாம் அல்லது அரைத்து பொடியாக பயன்படுத்தலாம். இந்த கலவை எல்லா வகை கூந்தலுக்கும் ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாக, முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி பிளவு, முடி நரைத்து போதல் போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு. மேலும் இதனை உபயோகப்படுத்துவதால், கூந்தல் பட்டுபோல் மென்மையாகிவிடும். வீட்டிலேயே இதன் கலவையை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

reetha shikakai
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 5 – 6 பூந்திக்கொட்டை, 6-7 சீயக்காய் மற்றும் சில நெல்லிக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
  • நன்கு ஊறியிருக்கும் இவற்றை அடுப்பில் வைத்து சூடு படுத்தி ஆற வைக்க வேண்டும்.
  • ஆறியபின் இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.
  • வடிகட்டிய கலவையை ஷாம்புவாக பயன்படுத்தலாம்.

இதனை பயன்படுத்தி தலைமுடியை அலசும்போது, தலைமுடி அதிகபடியாக சிக்கு விழுவதை போல் இருக்கும். ஆனால், அலசியபின் கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement