இந்த மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமானது

   |  Updated: July 30, 2018 12:32 IST

Reddit
Include These 6 Spices In Your Diet To Stay Healthy This Monsoon

கோடைகால நாட்களில் இருந்து நாம் தப்பித்து விட்டோம், மழைக்காலத்திற்கு நன்றி. இந்த அற்புதமான காலநிலையில் எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த மழைக்காலம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உடல் நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பும் அதிகம். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்று போக்கு ஆகியவை இந்த சமயங்களில் வரும் பிரச்னைகள். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இது ஏற்படும். ஈரப்பதமான காலநிலை காற்று, உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றில் பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்கிறது, இது உடலை மோசமாக்குகிறது. இந்த காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமானது.

Newsbeep

உங்கள் நோயெதிர்ப்பு அதிகரிக்க சில மசாலாக்கள் அவசியம். அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய்களை விரட்டியடிக்கலாம். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1. பெருங்காயம்

பெருங்காயம், ஆன்டி இன்ஃபிளமெட்டரி,ஆன்டி பயோடிக் மற்றும் ஆன்டி வைரல் பண்புகளை கொண்டிருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மேலும் இது பல ஆரோக்கிய நலன்களையும் கொண்டுள்ளது. வயிற்றுப்போக்கு மற்றும் வாயு, வீக்கம், அஜீரணம் மற்றும் குடல் எரிச்சல் (IBS) போன்ற ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆகையால் பெருங்காயத்தை குழம்பு மற்றும் இனிப்புகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

heeng

2. மஞ்சள்

ஜர்னல் PLOS ONE இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, மஞ்சளிலிருக்கும் குர்குமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மஞ்சள் வயிற்று பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே இதனை குழம்பு வகைகள், மாமிசங்கள் மற்றும் அரிசி உணவுகளில் சேர்க்கவும் அல்லது இதை பாலில் சேர்த்து குடியுங்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கும்.

turmeric

3. மிளகு

முழுதாக, நொறுக்கப்பட்ட அல்லது தூள் செய்யப்பட்ட, கறுப்பு மிளகு குடல் மற்றும் பிற வயிற்று பிரச்னைகளின் வாய்ப்புகளை குறைக்கும். இது அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் குணங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. நீங்கள் முட்டை, சாண்ட்விஜ், காய்கறி, சூப்கள், சாலடுகள், போன்றவற்றில் மிளகு சேர்க்கலாம்.

black pepper

4. கிராம்பு

கிராம்புகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் செல்-சேதமடையாத ஃப்ரீ ரேடிக்கிள்களுக்கு எதிராக போராடும். உடலில் உள்ள பாக்டீரியாவை உருவாக்கும் நோய்த்தாக்குதல் மற்றும் நோய்களை தோற்றுவிக்கும் அபாயத்தை குறைப்பதில் கிராம்பிலிருக்கும் யூகெனோல் என்றழைக்கப்படும் மூலப்பொருள் உதவுகிறது.

cloves

5. வெந்தயம்

வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன, அதே நேரத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்கும். மழைக்காலத்தில் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு எதிராக இது நம்மைப் பாதுகாக்கும்.

fenugreek seeds

6. பட்டை

பட்டையில் தேவையான அளவு மாங்கனீஸ், கால்சியம், நார் மற்றும் இரும்புச்சத்து ஆகியவைகள் உள்ளது. வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, மற்றும் பூஞ்சை எதிர்ப்பு ஆகியப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. பட்டை டீயை குடியுங்கள் அல்லது அதை அரிசி உணவுகள் மற்றும் புட்டிங்குகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

cinnamon

7. அன்னாசி பூ

Listen to the latest songs, only on JioSaavn.com

அன்னாசி பூ வைரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது என்று DK பப்ளிஷிங்கின் ஹீலிங் உணவுகள் புத்தகம் கூறுகிறது. இனிப்பில் இதை சேருங்கள் அல்லது பிரியாணி போன்ற அரிசி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

star anise

இந்த பருவமழைக் காலத்தில், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, இந்த அத்தியாவசிய மசாலாக்களை உங்கள் அன்றாட உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement