உடல் எடை குறைக்கும் வீகன் டயட்!!

தினமும் உணவில் பருப்பு சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்படியான வீகன் உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.    

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 15, 2019 13:12 IST

Reddit
Protein-Rich Foods: Include These High Protein Vegan Foods In Your Weight Loss Diet
Highlights
  • அசைவ உணவுகளையும், பால் பொருட்களையும் தவிர்ப்பதுதான் வீகன் டயட்.
  • டோஃபு மற்றும் பருப்புகளில் புரதம் அதிகமாக இருக்கிறது.
  • புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது.

பால் மற்றும் பால் பொருட்கள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்த்து முழுக்க முழுக்க தாவரங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்வதே வீகன் டயட்.  வீகன் டயட்டை பின்பற்றும்போது புரத இழப்பு ஏற்படலாம்.  ஆனால் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாவரங்கள் அல்லது சைவ உணவுகளுள் சில உணவுகளில் புரதம் அதிகபடியாக நிறைந்துள்ளதாம்.  அவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதோடு, தசைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.  சில வீகன் டயட் உணவுகளை பார்ப்போம்.  

கினோவா: 
சிறுதானியங்களில் ஒன்றான இந்த கினோவாவில் புரதம், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை நிறைந்திருக்கிறது.  இதன் காரணமாக இருதய நோய்கள், கொலஸ்ட்ரால் போன்றவை தடுக்கப்படுகிறது.  அடிக்கடி இதுபோன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  
 

2jj9dp3

 டோஃபு: 
சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபு காட்டேஜ் சீஸிற்கு இணையானது.  பனீர், டோஃபு போன்ற உணவுகள் 2000 ஆண்டுகளாகவே பயன்பாட்டில் உள்ளது.  டோஃபுவில் அமினோ அமிலம், கால்சியம், இரும்புச் சத்து, புரதம் போன்ற சத்துக்கள் உள்ளது.  உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கிறது.  tofu tikka

 

விதைகள்: 
சூரியகாந்தி விதை, ஆளி விதை, சியா விதை, ஹெம்ப் விதை போன்றவற்றில் புரதம், நார்ச்சத்து, ஃபேட்டி ஆசிட் போன்றவை இருக்கிறது.  தினமும் சிறிதளவு எல்லாவிதமான விதைகளையும் சாப்பிட்டு வரலாம்.  2sg9tr88

 

பருப்புகள்: 
பருப்புகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  தினமும் உணவில் பருப்பு சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  இப்படியான வீகன் உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  

pk8mbp08

 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement