பாலை எப்படி பாதுகாப்பது என்று தெரியுமா?

எளிதில் கெட்டுப்போகக்கூடிய உணவு பொருள் பால். அதனை எப்படி பாதுகாப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 01, 2019 13:24 IST

Reddit
Indian Cooking Hacks: Keep These Tips Handy While Cooking With Milk
Highlights
  • நம் சமையலறையில் எப்போதும் இருக்கக்கூடியது பால்.
  • பால் க்ரீமியாக இருப்பதால் ருசியாக இருக்கும்.
  • பால் கெட்டுப்போகாமல் இருக்க நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

சமையல் கலையை பொருத்தவரை நாளுக்கு நாள் குறிப்புகளும், லாவகங்களும் யாராவது கற்றுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  இந்த சமையல் குறிப்புகள் நேரத்தை மிச்சப்படுத்தவும், உணவு ருசியாகவும் இருப்பதற்கும் உதவுகிறது.  நம் சமையலறையில் பொதுவாக இருக்கக்கூடியது பால்.  பாலை கொண்டு இனிப்பு மற்றும் மற்ற ரெசிபிகளை தயாரிக்கலாம்.  பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் அதன் க்ரீமி தன்மை உணவிற்கு ருசியை சேர்க்க உதவுகிறது.  பாலை எப்படி பாதுக்காப்பது என்பது குறித்து பார்ப்போம். 

3nk86n5g 

1.பால் கருகாமல் இருக்க:

பாலை கொதிக்க வைக்கும்போது கருகாமல் இருக்க, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.  பாத்திரத்திரம் கருகாமல் இருக்கவும், அடிபிடிக்காமல் இருக்கவும் தண்ணீர் ஊற்றலாம். 

2. பால் கெட்டுப்போகாமல் இருக்க:

பால் கெட்டுப் போகாமல் இருக்க, அதனை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.  பாலை எப்போதும் உடனடியாக பயன்படுத்திவிடுங்கள் அல்லது அடுத்த நாள் பயன்படுத்தலாம்.  பாலை கொதிக்க வைத்து, ஆற வைத்து பின் ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

3. பாலை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் வைக்காமல் விட்டுவிட்டீர்களா? கவலை வேண்டாம்.  அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டு போகாமல் இருக்கும். 

4. பாலை கொதிக்க வைக்கும்போது அதன் மேல் மரத்தால் ஆன ப்ளேட் ஏதேனும் வைக்கலாம்.  அப்படி வைக்கும்போது அது பொங்கி வராமல் இருக்கும். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement