சூக்கினி அல்வாவை பாரம்பரிய முறையில் எப்படி செய்யலாம்?

வெள்ளரி, பூசணிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளுள் சூக்கினியும் ஒன்று.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 11, 2019 16:49 IST

Reddit
Traditional Indian Dessert With A Healthy Twist! Try This Zucchini Halwa Recipe
Highlights
  • சூக்கினியை கொண்டு ருசியான அல்வா தயாரிக்கலாம்.
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளுள் சூக்கினியும் ஒன்று.
  • இந்த ரெசிபி தயாரிப்பது மிகவும் எளிமையானது.

அல்வா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?  நெய் மணத்துடன் வாயில் இட்டவுடனே கரைந்து போகும் அல்வாவை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவற்றை வைத்து செய்வார்கள்.  உதாரணமாக, பூசணிக்காய், கேரட், பீட்ரூட் போன்றவை கொண்டு அல்வா செய்வது வழக்கமாக இருக்கிறது.  தற்போது சூக்கினி கொண்டு எப்படி ருசியான அல்வா தயாரிப்பதென்று பார்ப்போம்.  நவராத்திரி ஸ்பெஷலாக இதனை செய்து பிரசாதமாக தருவதை வழக்கமாக சிலர் கொண்டுள்ளனர்.  ரவை அல்லது கோதுமை அல்லது கடலை மாவு கொண்டு இந்த ரெசிபியை தயாரிக்கலாம்.  நெயில் நீங்கள் விரும்பும் மாவு சேர்த்து வறுத்து அதில் சர்க்கரை பாகு சேர்க்கவும்.  நட்ஸ் மற்றும் ஏலக்காயை அதன் நறுமணத்திற்காக சேர்க்கலாம்.  ருசியான அல்வாவில் ஆரோக்கியத்தை கட்டாயமாக எதிர்பார்க்க முடியாது.  ஆனால் இந்த அல்வாவில் ஆரோக்கியம் அதிகமாக இருக்கிறது.  வெள்ளரி, பூசணிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளுள் சூக்கினியும் ஒன்று.  
 

zucchini

 நன்மைகள்: 
சூக்கினியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  இதனால் செரிமானம் எளிமையாக இருப்பதோடு உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.  இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  இதில் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான நீர் தேவை பூர்த்தியாகும்.  இதில் பொட்டாஷியம் இருப்பதால் நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் குணமாகும்.  இதில் வைட்டமின் ஏ, சி அதிகபடியாக இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதனை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.  

அல்வா தயாரிக்க: 
சூக்கினியில் பால், கோயா, சர்க்கரை ஆகியவை சேர்த்து அல்வா தயாரிக்கலாம்.  இதில் மலாய் மற்றும் செர்ரி சேர்த்து பரிமாறலாம்.  இந்த இனிப்பு சாப்பிட ருசியாக இருக்கும்.  
 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement