மாதக் கணக்கில் கறிவேப்பிலையைச் சேமிக்க வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!

சமையல் பயன்பாட்டைத் தவிர, கறிவேப்பிலை, புதிய மற்றும் உலர்ந்த வடிவத்தில், அதிக ஊட்டச்சத்து மதிப்புடையது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த உள்ளூர் இந்திய மூலிகையில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை உடலில் இருக்கும் கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும்.

NDTV Food  |  Updated: March 19, 2020 15:34 IST

Reddit
Indian Kitchen Tips: Follow These Steps To Store Curry Leaves At Home For Months
Highlights
  • கறிவேப்பிலை ஆன்டி-ஆக்ஸிடண்ட் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியது
  • கறிவேப்பிலை மாத கணக்கில் சேமிக்க முடியும்
  • கறிவேப்பிலை சமையல் மற்றும் மருத்துவ பயன்பாடு இரண்டையும் கொண்டுள்ளது

இந்திய உணவு அதன் சுவைகள் மற்றும் மசாலாப் பொருட்களுக்குப் பெயர் பெற்றது; சுவை கொண்டுவர இயற்கைப் பொருட்கள் (மூலிகைகள்) பயன்படுத்துவதே சிறந்த விஷயமாகும். மாறாக, நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால், ஒவ்வொரு உணவையும் மாநில வாரியாக மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது. தென்னிந்தியாவின் சுவையைக் குறிப்பிடும் அத்தகைய ஒரு மூலிகை கறிவேப்பிலை, அல்லது நாம் பொதுவாக அதை அழைப்பது- காதி பட்டா. இந்த மூலிகை நாடு முழுவதும் வெவ்வேறு உணவுகளில் பயன்படுத்தப்பட்டாலும், இது தென்னிந்திய உணவுகளுக்கு அடையாளத்தை அளிக்கிறது. சாம்பார் அல்லது உப்மாவின் வலுவான நறுமணத்தை அல்லது ஒரு கிண்ணத்தில் ரசத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! நிச்சயமாக, உங்களுக்கு இது எச்சில் ஊறச் செய்யும்.

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள்:

அதன் சமையல் பயன்பாட்டைத் தவிர, கறிவேப்பிலை, புதிய மற்றும் உலர்ந்த வடிவத்தில், அதிக ஊட்டச்சத்து மதிப்புடையது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த உள்ளூர் இந்திய மூலிகையில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை உடலில் இருக்கும் கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும். கறிவேப்பிலை ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, அவை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயை நிர்வகிக்கவும், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல செரிமான பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

கறிவேப்பிலையை உட்கொள்ளும் முறை:

முன்பு குறிப்பிட்டபடி, கறிவேப்பிலை சமையல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த மூலிகையை அன்றாட உணவில் சேர்ப்பதை ஒருவர் பரிசீலிக்க வேண்டும்.

உங்கள் அன்றாட உணவில் கறிவேப்பிலையைச் சேர்ப்பதற்கான 3 வழிகள்:

1. பருப்பு அல்லது குழம்புகளில் சேர்க்கலாம்

2. சட்னி, சாலட் அல்லது சாஸில் சேர்க்கலாம்

3. சில கறிவேப்பிலை மென்று சாப்பிடுவதும், மிதமான சூட்டில் தண்ணீரில் உட்கொள்வதும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர், இது எடை இழப்புக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

கறிவேப்பிலையைச் சேமிப்பது எப்படி?

கறிவேப்பிலை செடியை எங்கும் எளிதாக வளர்க்க முடியும் என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் தோட்டங்களில் செடியை வளர்ப்பதில்லை. அவ்வாறான நிலையில், மக்கள் மூலிகையைச் சந்தையிலிருந்து வாங்குகிறார்கள், அங்கு ஆண்டு முழுவதும் எளிதாகக் கிடைப்பதில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்கு எளிதான பதில், சேமித்து வையுங்கள்! சரியாகச் செய்தால், கறிவேப்பிலை குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

நீண்ட நாட்களுக்குக் கறிவேப்பிலையை எப்படிச் சேமிக்கலாம்:

1. தண்டுகளிலிருந்து கறிவேப்பிலை இலைகளை அகற்றவும்.

2. அதை நன்றாகக் கழுவி, டவல் அல்லது சுத்தமான துணியால் ஈரத்தை அகற்றவும்.

3. அதைப் பெரிய தட்டில் போட்டு, வெயிலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் காய வையுங்கள்.

4. அவை காய்ந்து மொறுமொறுப்பாக ஆனவுடன், காற்று புகாத பாக்ஸில் போட்டுச் சேமியுங்கள்.

கறிவேப்பிலையைச் சேமிக்க வேறு சில வழிகள்:

1. தண்டுகளிலிருந்து இலைகளை அகற்றி, தண்ணீரில் கழுவவும். பின்னர் துணியில் போட்டு ஈரத்தை அகற்றவும். மிதமான சூட்டில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்தெடுக்கவும். எண்ணெய்யில் இருந்து அகற்றி, அதை ஃபிரிட்ஜில் சேமிக்கவும். உங்கள் உணவுகளில் கடைசியாக இவற்றைச் சேர்த்துப் பரிமாறவும்.

2. வெயிலில் காய வைத்து, அவற்றைப் பொடியாக்கியும் பயன்படுத்தலாம். காற்று புகாத பாக்ஸில் வைத்து சில வாரங்கள் பயன்படுத்தலாம்.

இலைகளைக் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல், வெளியையும் சேமிக்க முடியும். ஆனால் கோடையில் அதைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் போதெல்லாம், கறிவேப்பிலை வெளியே எடுத்து உணவில் பயன்படுத்துங்கள்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com