நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவு விற்பனை எண்ணிக்கையை தொட்டது பார்லே-ஜி!

முன்னதாக பார்லே-ஜி பிஸ்கெட் விற்பனையில் சரிவு நிலை இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாம் நம்முடைய குழந்தை பருவ நினைவுகளோடு பார்லே-ஜிக்கு ஆதரவளிப்போம்.

   |  Updated: June 10, 2020 14:38 IST

Reddit
India's Favourite Biscuit 'Parle-G' Trends After Record High Sales In Lockdown

லாக் டவுன் காலத்தில் பார்லே ஜி அதிக விற்பனையைத் தொட்டுள்ளது.

Highlights
  • Parle G is a much-loved glucose biscuit in India
  • The company has registered record high sales in lockdown
  • The biscuit also began trending on Twitter after the news

இந்தியா கடந்த அறுபது நாட்களுக்கும் அதிகமாக லாக்டவுனில் இருந்து வந்தது. இக்காலக்கட்டங்களில் பல உணவு வகைகளை மக்கள் விரும்பி சமைக்கலாயினர். திரை பிரபலங்கள் தொடங்கி இதர பணக்காரர்கள் வரை டல்கோனா காபியை செய்யத் தொடங்கியிருந்தனர். அத்துடன் வாழப்பழ பிரட் செய்யவும் பலர் முயற்சித்திருந்தனர். இந்த வகையான உணவுகள் வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். மட்டுமின்றி இந்த உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவையே. இவையெல்லாம் ஒருபுறமிருக்க சமானிய மக்களின் உணவு பழக்கம் வேறு மாதிரியாக உள்ளது. இந்த லாக்டவுன் காலக்கட்டத்தில் குளுக்கோஸ் நிறைந்த பிஸ்கெட்டான பார்லே-ஜி  அதிக அளவு விற்பனையை பதிவு செய்துள்ளது.

Newsbeep

(Also Read: )பார்லே-ஜி  இந்தியாவில் 1938 காலக்கட்டங்களில் விற்பனையை தொடங்கியது. சாமானிய இந்தியர்களின் காலை தேநீருக்கு பக்கத்தில் மிக நிச்சயமாக பார்லே-ஜி பிஸ்கெட் இடம் பெற்றிருக்கும். லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்ய உணவு பட்டியலில்
பார்லே-ஜி முதல் இடத்தினை பிடித்திருந்தது. குளுக்கோஸ் மற்றும் இதர சத்துக்களுடன் இந்த பிஸ்கெட் வெறும் 5 ரூபாய்க்கே கிடைப்பதால் பலர் இதனை வாங்குகின்றனர். இந்த லாக்டவுன் காலத்தில் பார்லே-ஜி மிகப்பெறும் விற்பனையை சந்தித்துள்ளது.

(Also Read: )

Listen to the latest songs, only on JioSaavn.com

பார்லே-ஜி விற்கப்பட்ட சரியான அளவு தெளிவாக இல்லை என்றாலும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மூன்று மாதங்கள் பார்லே தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பார்லே தயாரிப்புகளின் தலைவரான மயங்க் ஷா கூறுகையில் நிறுவனம் ஒட்டுமொத்த சந்தை பங்கில் கிட்டத்தட்ட 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி பெரும்பாலும் பார்லே-ஜி பிராண்டால் உள்ளது. குறைந்த விலை மற்றும் அதிக எண்ணிக்கையிலான பிஸ்கெட்டுகள் பார்லே-ஜி விற்பனையை அதிகரித்துள்ளது. “லாக்டவுன் காலத்தில் பார்லே-ஜி பலருக்கு ஆறுதலான உணவாக மாறியது; மேலும் பலருக்கு தங்களிடமிருந்த ஒரே உணவாக பார்லே-ஜி மட்டுமே இருந்தது. பிரட் வாங்க முடியாத நிலையில் உள்ள சாமானியர்களுக்கு பார்லே-ஜி ஒரு சிறந்த மாற்று உணவாக இருந்தது.“ என மயங்க் ஷா எகனாமிக் டைம்ஸிடம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக பார்லே-ஜி பிஸ்கெட் விற்பனையில் சரிவு நிலை இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாம் நம்முடைய குழந்தை பருவ நினைவுகளோடு பார்லே-ஜிக்கு ஆதரவளிப்போம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement