Sakshita Khosla | Updated: November 21, 2018 19:41 IST
இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஃபுட் ஹேஷ்டேக்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இம்மாதிரியான சமூக வலைதளங்கள் உணவு பிரியர்களுக்கு மற்றும் தொழில் தொடங்குபவர்களுக்கு சிறந்த ப்ளாட்ஃபார்மாக அமைகிறது. முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்களில் தாங்கள் விரும்பியவாறு கண்கவரும் வகையில் உணவு புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர். இது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கிறது. தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தவும் வருமானம் ஈட்டவும் சிறந்த வாய்ப்பை இந்த சமூக வலைதளங்கள் ஏற்படுத்தி கொடுக்கின்றன.
தில்லியில் “Food at Instagram” என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது இந்தியாவில் பிரபலமாகும் இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் Le15ன் பாஸ்ட்ரி செஃப் பூஜா திங்க்ரா, செலிப்ரிட்டி செஃப் குனால் கபூர், அர்ச்சனாஸ் கிட்சனின் அர்ச்சனா தோஷி, தீபா ராஜ்பால் மற்றும் மினியேச்சரிஸ்ட் ஷில்பா மிதா போன்ற பல பிரபலமான ‘Foodstagrammers' பங்குபெற்றனர். அதில் அவர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். துவக்கத்தில் தங்களுக்கு இருந்த சிரமங்கள் குறித்தும் அதனை எப்படி கையாண்டு தங்கள் பயணத்தில் வெற்றி பெற்றனர் என்றும், அந்த வெற்றியில் இன்ஸ்டாகிராமின் பங்கு எப்படி பட்டதென்பதையும் தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றுவதை காட்டிலும் கானொலிகளை பதிவேற்றுவது தான் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதியக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் இந்த பிரபலங்கள். தொழில் சார்ந்த வளர்ச்சியை இன்ஸ்டாகிராம் எப்படி ஏற்படுத்துகிறது என்பது குறித்து குனால் கபூர் விளக்கினார். கடின உழைப்பு குறித்து அர்ச்சனா தோஷி பேசினார். கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் உணவுக்காக கொடுக்கப்படும் பிரபலமான இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள் சிலவற்றை தொகுத்து வழங்கினர்.
Comments