சர்வதேச யோகா தினம் : பயிற்சிக்கு முன்/பின் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்

இந்த ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு, சத்து நிறைந்த உணவுடன் கூடிய யோகா பயிற்சிகளை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உறுதி கொள்வோம்

Sarika Rana  |  Updated: June 21, 2018 19:09 IST

Reddit
Yoga Day 2018: Foods To Eat Before And After Your Yoga Session This International Yoga Day
Highlights
  • ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது
  • ஆரோக்கியமான உடலுடன் கூடிய மனதிற்கு யோகா வழிவகுக்கும்
  • பயிற்சிக்கு முன்/பின் சாப்பிட வேண்டிய உணவுகளின் குறிப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், சர்வதேச யோகா தினம் ஜூன் மாதம் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உடல், மனம், ஆன்மீகம் ஆகிய மூன்றையும் இணைத்து செய்யப்படும் யோகா பயிற்சிகள், பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவை. முழு உடல் ஆரோக்கியத்திற்கான ஆசனங்கள் மற்றும் பயிற்சிகள் யோகாவில் உள்ளன. அது மட்டுமின்றி, மூச்சு பயிற்சி (பிராணயாமா), தியானப் பயிற்சி, ஆகியவை மன வலிமைக்கான யோகா பயிற்சிகள் ஆகும். தொடர்ந்து யோகா பயிற்சிகளுடன், ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு வந்தால், உடல் எடை குறைக்கவும், உடல் ஆரோக்கியமாவதற்கும் வழிவகுக்கும். 

யோகா பயிற்சிக்கு முன்னும் பின்னும் ஆரோகியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.  சரியான நேரத்தில், ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், யோகா பயிற்சியுடன் கூடிய பலன் கிடைக்கும்.
yoga 620x350
 

யோகா பயிற்சிக்கு முன் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்:காலை நேரத்தில் யோக பயிற்சி மேற்கொள்வதாக இருந்தால், பயிற்சி செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் வாழைப்பழங்கள், பெர்ரிகள் சாப்பிடலாம்.  தயிர், உலர் பழங்கள், ஓட்ஸ், முட்டை, புரதச்சத்து நிறைந்த பானங்கள் ஆகியவற்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவு வகைகள் சத்து நிறைந்ததாகவும், உடலுக்கு ஆற்றல் அளிக்க கூடியதாகவும் இருக்கும்.

மாலை நேரத்தில் யோகா பயிற்சி செய்பவர்கள், பயிற்சியின் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வேகவைத்த காய்கறிகள், சால்ட், நட்ஸ், ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இந்த உணவு வகைகள், யோகா பயிற்சி செய்வதற்கான சத்து அளிக்கும்
 
flax seed smoothieYoga Day 2018: Start your day with protein-rich foods like smoothies
 
யோகா பயிற்சிக்கு பின் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்

பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீண்டும் உடலுக்கு ஏற்ற, தண்ணீர் குடிக்க வேண்டும்.  ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, சாலட், பழ வகைகளை பயிற்சிக்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டைகள், சாண்ட்விச், பருப்பு வகைகள், தயிர் ஆகியவற்றையும் எடுத்து கொள்ளலாம்.

யோகா பயிற்சிக்கு பிறகு சாப்பிட கூடாதவை

எண்ணெய், மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமாக உள்ள உணவு பொருட்களை தவிர்க்கவும். அதிக அளவில் தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் உள்ள நீர் அளவு குறைந்தால், சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

சர்வதேச யோகா தின வாழ்துக்கள்!

Commentsஇந்த ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு, சத்து நிறைந்த உணவுடன் கூடிய யோகா பயிற்சிகளை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உறுதி கொள்வோம்.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement