IRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…

மெனுவை மறு சீரமைக்கவும் பல்வேறு வகையான பிராந்திய உணவுகள் மற்றும் சுவையான உணவுகளை அறிமுகப்படுத்தவும் வாரியம் முடிவு செய்துள்ளது.

Edited by: Saroja  |  Updated: December 30, 2019 18:07 IST

Reddit
IRCTC Increases Food Menu Prices Across Multiple Trains, Check Revised Prices Here

ரயில்வேயில் உணவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தை விரும்புகிறவர்கள்  முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள். ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் உணவு விலையை ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், “இந்திய ரயில்வே  உணவுக் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்துள்ளது.” என்று  கூறியுள்ளது. அதிகரித்த கட்டணங்கள் மார்ச் 2020 முதல் நடைமுறைக்கு வரும். கட்டண உயர்வு 6 ஆண்டுகளுக்குப் பின் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கான உணவின் தரத்தை மேம்படுத்தவும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வே புதிய உணவு மெனு விலை 

முதல் வகுப்பு ஏசி  

டீ - ரூ.35 - ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது 

காலை உணவு -ரூ140 இதற்கு முன் ரூ.133 ஆக விற்கப்பட்டது.

மதிய உணவு மற்றும் இரவு உணவு ரூ.245. இதன் விலையில் ரூ. 15 உயர்தப்பட்டுள்ளது. 

இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் சேர் காரில்

காலை தேநீர் ரூ. 20 - ரூ 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது

காலை உணவு ரூ.105 ரூ 8 வரை அதிகரித்துள்ளது.

மதிய உணவு மற்றும் இரவு உணவு 185 - இதற்கு முன்பு ரூ. 175 ஆக இருந்தது.

மெனுவை  மறு சீரமைக்கவும் பல்வேறு வகையான பிராந்திய உணவுகள் மற்றும் சுவையான உணவுகளை அறிமுகப்படுத்தவும் வாரியம் முடிவு செய்துள்ளது. உங்கள் பயணத்தின் போது தரமான உணவின் ஒரு பகுதியாக வெஜ் பிரியாணி (ரூ.80) முட்டை பிரியாணி (ரூ. 90) மற்றும் சிக்கன் பிரியாணி (ரூ.100) ஆகியவற்றை விரைவில் ஆர்டர் செய்ய முடியும்.



Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement