இரவில் உணவு உண்டால் உடல் பருமன் ஆகுமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும். அதிலும் முக்கியமாக  இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அடைய செய்யும்

Sarika Rana  |  Updated: June 22, 2018 16:51 IST

Reddit
Is Eating At Night Making You Gain Weight?
Highlights
  • காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது
  • இரவில் தாமதமாக உணவு உண்ணும் பழக்கம் நமக்குள் இருக்கிறது
  • இரவில் தாமதமாக உணவு உட்கொள்ள கூடாது
காலையில் ராஜா போல் சாப்பிட வேண்டும், மதியம் மற்றும் இரவு கம்மியாக உண்ணுவதே உடல் நலத்திற்கு நல்லது என கேட்டு வளர்ந்திருப்போம். மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும். அதிலும் முக்கியமாக  இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அடைய செய்யும் என பலர் நம்மிடம் கூறி இருப்பார்கள். பல ஆய்வுகள் இரவில் அதிகம் உண்டால் கெட்ட கொழுப்பு உடலில் அதிகரித்து, உடம்பு குண்டாக வழிவகுக்கும். அதனால் இரவில் விருந்து உண்ணுபவர்களாக இருந்தால் இப்பொழுதே நிறுத்தி விடுங்கள். 

Listen to the latest songs, only on JioSaavn.com

அதற்கான காரணங்கள் இதோ!இரவு நேரம் தாழ்த்தி உணவு உண்டால் நாம் அதிகமான உணவை உட்கொள்கிறோம் அத்துடன் உடனே  படுக்கைக்கு சென்று விடுவோம், அது இன்னும் பல சிக்கலைகளை தரும்.  மருத்துவர் படேல், ஆலோசகர், குளோபல்மருத்துவமனைகள் மும்பை பேசுகையில், "நம் உடல் இரவு நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள பழக்கப்பட வில்லை. இதனால் காலை நேரத்தில் சாப்பிடும் உணவை இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும். ஒரு நாளுக்கு 1800-3000 வரை ஒவ்வொரு உடலுக்கு ஏற்றவாறு கலோரிகள் தேவைப்படும். பொதுவாக 2000 கலோரி தேவை என்றால் இதில் 450-500 கலோரிகள் மட்டுமே இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் 
 
detox eating

மேலும் ஆரோக்கியமான நலனுக்கு  இரவு படுக்கைக்கு முன்னும் உங்கள் இரவு உணவுக்கு பின்னும் குறைந்தது 3 மணி நேர இடைவெளி வேண்டும் என்கிறார் நியூடிரிசியன் ஷில்பா அரோரா. இதற்கான காரணம் இரவில் நாம் தூங்கி விடுவதால் மெட்டபாலிசம் வேலை செய்யாமல் நின்று விடும். அதனால் உணவு சரியாக ஜீரணிக்காமல் உடலில் தங்கி உடலை பருமனாக்கி விடும்.

Commentsஅதனால் படுக்கைக்கு 3 மணிநேரம் முன்பு சாப்பிடுங்கள் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. 


 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement