பழங்கள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது சரியா??

வாழைப்பழம் சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை குடிக்க கூடாது.  இது அஜீரண கோளாறுகளை உண்டாக்கும்.  அதனால் வாழைப்பழம் சாப்பிட்ட பின் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 04, 2019 12:33 IST

Reddit
Is it Alright to Drink Water After Eating Fruits?
Highlights
  • பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
  • சாப்பிடும்போது தண்ணீர் சிறிதளவு குடிக்கலாம்.
  • சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்ட பின் நீர் அருந்த வேண்டாம்.

கோடை வெப்பம் மிகவும் கொடுமையானதாக இருக்கும் இவ்வேளையில் நீங்கள் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ளலாம்.  இவை உங்களை நாள் முழுக்க ஆற்றலுடன் வைத்திருப்பதோடு, புத்துணர்வாகவும் வைத்திருக்கும்.  அதேபோல வெப்பத்தால் அதிகபடியான வியர்வை வெளியேறும் என்பதால் நிறைய தண்ணீர் குடிக்கலாம்.  ஆனால் பழங்களோ பழச்சாறுகளோ குடித்த பின் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? என்று பெரும்பாலானோர் சிந்தித்து வருகின்றனர்.  பழங்கள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் வயிற்று வலி, வாயு தொல்லை மற்றும் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம்.

அது உண்மைதான் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சனைகளை உண்டு செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் அசிடிட்டி ஏற்படுகிறதாம்.  இதனால் வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியமும் உண்டாகிறது.  அதனால் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்ட பின் நீர் அருந்துவதை தவிர்த்திடுங்கள். 

Listen to the latest songs, only on JioSaavn.com

sit and drink water

இது குறித்து பிரபல ஆயுர்வேத நிபுணர் கூறுவதாவது, சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.  சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் அது வயிற்றினுள் சென்று செரிமானத்திற்கான அமிலங்களை நீர்த்துப்போக செய்துவிடும்.  அப்படி செய்துவிட்டால் உடல் குளிர்ந்து செரிமான பிரச்சனை ஏற்படும்.  அதனால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட பின் அரை மணி நேரத்திற்கு பின்பு மட்டுமே தண்ணீர் குடிப்பது நல்லது.

அதேபோல வாழைப்பழம் சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை குடிக்க கூடாது.  இது அஜீரண கோளாறுகளை உண்டாக்கும்.  அதனால் வாழைப்பழம் சாப்பிட்ட பின் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.  சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்.  பழச்சாறுகளிலே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் அதுவே போதுமானது.  பழங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்திய பின் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement