நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் லிச்சி பழத்தை சாப்பிடலாமா??

ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை பொருத்து இந்த பழத்தை அளவாக எடுத்து கொள்ளலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 18, 2019 10:47 IST

Reddit
Is It Safe For Diabetics To Eat Litchi? Experts Reveal
Highlights
  • லிச்சியில் மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
  • இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க லிச்சி பழம் சாப்பிடலாம்.
  • நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை அளவாக சாப்பிட வேண்டும்.

 இந்தியாவில் லிச்சி பழம் கோடைக்காலத்தில் கிடைக்கின்றன.  இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இதனை அப்படியே அல்லது ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம்.  ஐஸ்கிரீமுடன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  லிச்சி பழம் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து தக்கவைக்கப்படுகிறது.  இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.  செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதுடன் உடல் எடை குறைக்கவும் செய்கிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், நார்ச்சத்து, காப்பர் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் இருதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.  மேலும் இந்த லிச்சி பழத்தில் பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் இருப்பதால் எலும்புகளும் உறுதியாகும்.  

4cmh8l1o

நீரிழிவு நோயாளிகள் இந்த லிச்சி பழத்தை சாப்பிடலாமா என்று சிலருக்கு சந்தேகம் இருக்கிறது.  பொதுவாக க்ளைசமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள உணவுகளையும், சர்க்கரை சேர்த்த உணவுகளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.  உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்குமானால் நீங்கள் லிச்சி பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.  லிச்சியில் இயற்கையான இனிப்பு தன்மை இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.  நாள் ஒன்றிற்கு ஒருமுறை இந்த பழத்தை சாப்பிடலாம்.  தொடர்ச்சியாக சாப்பிட்டால் நிச்சயம் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை பொருத்து இந்த பழத்தை அளவாக எடுத்து கொள்ளலாம்.  லிச்சி பழத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் சுமார் 50 உள்ளது.  க்ளைசமிக் இன்டெக்ஸ் 55 க்கு குறைவான உணவு பொருட்கள் செரிப்பதற்கு தாமதமாகும்.  அப்படியானால் லிச்சியை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.  மேலும் லிச்சியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement